மகளிர் நலனுக்காக அதிமுக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதாக துணை முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டத்தில் உள்ள போடி நாயக்கனூர் பகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். அத்தொகுதியில் நடந்த பிரசாரத்தின்போது அவர் மகளிர் நலனுக்காக அதிமுக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தாலிக்கு தங்கம் திட்டத்தில் 4 கிராமில் இருந்து 8 கிராம் ஆக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. பேறு கால உதவித்தொகை 6 ஆயிரமாக இருந்து 18 ஆயிரமாக உயர்த்தியுள்ளது.

அதேபோல் மானிய விலையில் ஸ்கூட்டர் போன்ற பல்வேறு திட்டங்களை ஜெயலலிதா செயப்படுத்தியுள்ளார். ஆனால், திமுக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளதை நிறைவேற்றவில்லை. அவர்கள் கூறிய 2 ஏக்கர் நிலத்தை கொடுத்தார்களா?; அவர்களின் தேர்தல் அறிக்கை செல்லாத நோட்டு என்றார். அதிமுக தேர்தல் அறிக்கையில் உள்ள அத்தனையும் நாங்கள் நிறைவேற்றியுள்ளோம் என்று கூறினார்.

See also  பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 17 ஆம் தேதி முக்கிய தமிழக திட்டங்களை திறக்கவுள்ளார்