தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. மே மாதம் 2 ஆம் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அரசியல் காட்சிகள் கூட்டணியை உறுதி செய்து வேட்பாளர்களை அறிமுகம் செய்துள்ளது. வேட்பாளர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். தேர்தல் ஆணையம் தனது பணிகளை மேற்கொண்டு செய்து வருகிறது.

கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் சட்ட மன்ற தேர்தலை பாதுகாப்பாக நடத்த தமிழக அரசு பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

மேலும், 100 % வாக்குப்பதிவை பதிவு செய்ய தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இந்த ஆண்டு தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

தமிழக அரசு சட்ட பேரவை பொது தேர்தல் வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 6 ஆம் தேதி அன்று பொது விடுமுறை அறிக்கை உத்தரவிட்டுள்ளது. பொது விடுமுறைக்கான ஆணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சட்ட மன்ற தேர்தல் நடைபெறவுள்ள ஏப்ரல் 6ஆம் தேதி அனைத்து நிறுவனங்களுக்கும் ஊதியத்துடன் விடுமுறை அளிக்க தொழிலாளர் நலத்துறை உத்தரவிட்டுள்ளது. 1951 மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் பிரிவு 135பி கீழ் தேர்தல் நாளில் தொழிலாளர்களுக்கு பொது விடுமுறை அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

See also  தினமும் ஏலக்காய் பொடியை பாலில் கலந்து குடித்தால் குழந்தை பாக்கியம் பெறலாம்...