தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருவதால், சுமார் நாளொன்றுக்கு 8,000 பேர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
தற்போது கொரோனா நோய் தொற்று பரவல் அதிகமாக உள்ளதால், நியாயவிலைக் கடைகளில் பயன்படுத்தப்படும் பயோமெட்ரிக் முறையின் மூலமும் நோய்த் தொற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று மக்கள் அச்சப்படுகிறார்கள்.
இந்த பயோமெட்ரிக் முறையினால் கொரோனா நோய் தொற்று அதிகரிக்க கூடும், அதனால் இந்த முறையை மாற்ற அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.
அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் தற்போது பயோமெட்ரிக் முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதற்குப் பதிலாக மாற்று ஏற்பாடுகளை அரசு உடனடியாக செய்ய வேண்டும் என்று மக்கள் சக்தி இயக்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழகம் முழுவதும் உள்ள நியாய விலைக் கடைகளில் பயோமெட்ரிக் முறையில் பொதுமக்கள் தங்களுடைய விரல் ரேகையைப் பதிவுசெய்வதின் மூலம் நோய் தொற்றும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே இந்தப் பயோமெட்ரிக் முறையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும். இதற்கான மாற்றுவழியை அரசு கடைபிடிக்க வேண்டும்.
இல்லையென்றால் நோய்த்தொற்றின் தாக்கம் அதிகம் இருக்கும் என்று தெரிவித்து இருக்கின்றனர். .
gpkumar: இவர் பிரவீன் குமார் கணேசன் (Praveen Kumar Ganesan) என்பவராவார். இவர் Inavit Studio மற்றும் Bestpriceinindia.com ஆகிய இணையதளங்களின் நிறுவனரும், தொழில்நுட்ப ஆய்வாளருமாவார். இவர் தனது GPKUMAR என்ற பெயரால் அறியப்படுகிறார். இவர் தொழில்நுட்ப பகுப்பாய்வு மற்றும் டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ளார். நிஜ உலக செயல்திறன் அடிப்படையில் ஸ்மார்ட்போன்கள், இயர்பட்கள் போன்ற கேஜெட்களை மதிப்பீடு செய்வதில் இவர் கவனம் செலுத்துகிறார்