• இந்திய மக்கள் முன்னேற்ற கட்சியின் தலைவர் அர்ஜூனமூர்த்தி வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடபோவதில்லை என்று அறிவித்துள்ளார்.
  • நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவேன் என்று அறிவித்த போது ரஜினிகாந்தின் நண்பர் அர்ஜூனமூர்த்தி பாஜகவில் இருந்து விலகி ரஜினி தொடங்க இருந்த அரசியல் கட்சிக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். பிறகு ரஜினிகாந்த் அரசியலுக்கு குட் பை சொல்லிவிட்டார்.
  • இதனால் அர்ஜூனமூர்த்தி இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி என்ற கட்சியைத் தொடங்கினார். பின்னர் அக்கட்சியின் சின்னமாக ரோபோவை அறிவித்திருந்தார். மேலும் தேர்தல் அறிக்கையையும் அவர் வெளியிட்டு இருந்தார்.
  • இந்நிலையில் இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி வரும் சட்டப்பேரவைத் தேர்தலில்
    போட்டியிட போவதில்லை என்று அறிக்கை வாயிலாக தெரிவித்து உள்ளது.
  • அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழக அரசியலில் ஒரு மாற்றத்திற்க்காவும் , தமிழ் மக்களுக்கு அர்ப்பணிப்புடன் சேவை செய்வதற்கும், ஒரு முற்போக்கான மற்றும் நேர்மையான அரசியல் கட்சியின் வலுவான தேவையும் தான், ஒரு புதிய அரசியல் கட்சியான நமது இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சி உருவாவதற்கு காரணமாக இருந்தது.
  • இந்த ஆண்டு பிப்ரவரி 26 ஆம் தேதி தமிழக சட்டசபை தேர்தலுக்கான அட்டவணையை தேர்தல் ஆணையம் வெளியிட்ட பிறகு பிப்ரவரி 27-ம் தேதி இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சியின் தொடக்கவிழா நடைபெற்றது.
  • ஆரம்பத்தில் வரும் தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட வேண்டும் என்ற திட்டமும் இந்த கட்சிக்கு இருந்தது.
  • கால அவகாசம் குறைவாக இருப்பதாலும், நேரத்திற்கு எதிரான ஒரு போட்டியில் நாங்கள் இருந்தோம். இருந்தும் இந்த ஆண்டு மார்ச் 9-ம் தேதி எங்களுடைய புதுமையான, மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் ரோபோட் என்ற எந்திரன் சின்னத்தை அறிவித்தோம்.
  • மேலும் எங்கள் புரட்சிகரமான எண்ணங்களைக் கொண்ட தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டோம். பொதுமக்கள் மற்றும் ஊடகங்கள் மிகுந்த உற்சாகத்துடன் இதனை வரவேற்று பாராட்டவும் செய்தார்கள்.
  • அடுத்த சில நாட்களிலேயே எங்கள் இ.ம.மு.கட்சி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு நலன் மற்றும் மேம்பாட்டு திட்டங்களை போலவே மற்ற முன்னணி அரசியல் கட்சிகளும் தேர்தல் வாக்குறுதிகளில் வெளியிட்டார்கள்.
  • அதில் தமது அறிக்கைகளும் உள்ளடங்கி இருந்தது. தமிழகத்தின் சிறந்த நலனுக்காக எங்கள் புதுமையான மற்றும் புரட்சிகரமான தேர்தல் அறிக்கை சாராம்சமான கருத்துகளை வழிமொழிந்ததை நாங்கள் பாராட்டுகிறோம்.
  • நங்கள் உண்மையாவே காலத்திற்கு எதிரான ஒரு பந்தயத்தில் களமிறக்கப்பட்டுள்ளோம். எங்கள் சத்தியம், சமத்துவம் மற்றும் சமர்பணம் என்ற கொள்கைகள் தான் எங்களது அனைத்து பணிகளுக்கும் , செயல்முறைகளுக்கும் வழிகாட்டுகின்றன.
  • அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களிலிருந்து வேட்பாளர்களை தரமறிந்து தேர்வு செய்தல், அனைத்து தொகுதிகளிலும் ரோபோட் சின்னத்திற்கான தொழில்நுட்ப வரிசைப்படுத்துதல், தேவையான மற்ற வளங்கள் சேகரித்தல், தமிழகம் முழுவதும் திட்டமிட்டபடி விரிவான களப்பிரசாரம் செய்தல் போன்ற அனைத்து செயல்பாடுகளும் இந்த குறுகிய காலத்தில் முழுமையாக கையாளுவதற்கு நமக்கு இடம் தரவில்லை என்பது தான் உண்மை என்று கூறுகிறார்கள்.
  • இதனால் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவிருக்கும் தற்போதைய தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் தங்கள் கட்சியின் சார்பாக வேட்பாளர்களை நிறுத்தி பங்கேற்க வேண்டாம் என்று இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சி முடிவு எடுத்துள்ளது.
  • நாங்கள் தொடர்ந்து எங்கள் கொள்கையின் அடிப்படையில் கட்சியின் பலத்தை வளர்த்துக் கொள்வோம். மேலும் தமிழக மக்கள் ஆதரவோடு சற்றும் தொய்வில்லாமல் நமது மாநிலத்திற்கும் நாட்டிற்கும் சத்தியம், சமத்துவம் மற்றும் சமர்பணம் ஆகிய எங்கள் கொள்கையின் அடிப்படையில் தொடர்ந்து எங்கள் சேவையை செய்வோம்” என்று இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சியின் தலைவர் அர்ஜூனமூர்த்தி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
See also  அஞ்சல் அலுவலகத்தில் மாத வருமானம்...