கடத்த ஆண்டு டிசம்பர் மாதம்  ஐதராபாத்தில் இயக்குனர் சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வந்த அண்ணாத்த திரைப்பட  படப்பிடிப்பு தளத்தில் டெக்னீஷியன்களில்  4 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டதால் படப்பிடிப்பை தற்காலிகமாக ரத்து செய்தனர்.

இதையடுத்து தற்காலிகமாக மூன்று மாதங்கள் நடைபெறாமல் இருந்த படப்பிடிப்பு, சென்னையில் கடந்த மாதம் மீண்டும் தொடங்கி நடைபெற்று வந்தது.

இதற்காக படப்பிடிப்பு தளங்களில்  பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்றது. இதில் ரஜினிகாந்தும் பங்கேற்று நடித்து வந்தார்.

அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பிற்காக நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஐதராபாத் சென்றுள்ளார். தனி விமானம் மூலம்  சென்னையில் இருந்து அவர் ஐதராபாத் சென்றுள்ளார்.

மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, பிரகாஷ் ராஜ் என பல நடிகர்கள் அண்ணாத்த படத்தில்  நடிக்கின்றனர்.
இந்தப்படத்தை  டி இமான் அவர்கள்  இசையமைக்கிறார்.  இப்படம் 2021 ஆண்டு  தீபாவளிக்கு வெளியாகும்  என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
See also  ரூ.758 கோடிக்கு ஏலம் போன பிக்காசோவின் ஓவியம்

Categorized in: