ஏடிஎம்களில் அனுமதிக்கப்பட்ட மாதாந்திர இலவச பரிவர்த்தனையைத் தாண்டி பயன்படுத்துவதற்கான கட்டண உயர்வு இன்று (ஆகஸ்ட் 1 முதல்) அமலுக்கு வருகிறது.

வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிகளில் ஒரு மாதத்தில் மூன்று முறை கட்டணமில்லாமல் ஏடிஎம்மில் பணம் எடுத்துக்கொள்ளலாம். அதற்க்கு மேல் பணம் எடுத்தால் 15 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இன்று முதல் ஏடிஎம்களில் பணம் எடுக்க கட்டணம் 15 ரூபாயில் இருந்து 17 ஆக உயர்கிறது. அதேப்போல் பணம் அல்லாத மற்ற பரிவர்த்தனைகளுக்கு ரூ.5 கட்டணமாக இருந்த நிலையில் தற்போது அது 6 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

இது குறித்து, இந்திய ரிசர்வ் வங்கி கடந்த ஜூன் மாதம் அறிவிப்பை ஒன்றை வெளியிட்டது. இந்த அறிவிப்பின்படி, இன்று முதல் ஏடிஎம் கட்டணம் மற்றும் பணம் அல்லாத பரிவர்த்தனை கட்டணம் அனைத்து வங்கிகளிலும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஏடிஎம் கட்டணம் அதிகரிப்பு வங்கி வாடிக்கையாளர்களை அதிருப்தி அடைய செய்துள்ளது.

இலவசமாக அனுமதிக்கப்படும் ஏடிஎம் பரிவர்த்தனைக்கு மேலாக பயன்படுத்தினால் வாடிக்கையாளரிடம் வசூலிக்கப்படும் 20 ரூபாய் பரிவர்த்தனை கட்டணத்தில் இப்போது மாற்றமில்லை. இருப்பினும் இது வருகிற ஜனவரி 1ஆம் தேதி முதல் 21 ரூபாயாக உயர உள்ளது.மேலும் வீடு தேடி அளிக்கும் தபால் துறை வங்கிச் சேவைகளுக்கு இன்று முதல் சேவைக் கட்டணம் அமலாகிறது. பரிவர்த்தனை மதிப்புக்கேற்ப இதற்கான கட்டணம் வசூலிக்கப்படும்.

See also  மேஷ ராசிபலன் 2023