செவ்வாய் கிரகத்தில் தரையிரக்கப்பட்டுள்ள ரோவர் ரோபோட்..!

செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிரக்கப்பட்டுள்ள நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர் ரோபோட் உயிரினங்கள் வாழ்வதற்கான ஆதரங்களைத் திரட்டி வருகிறது.

செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிரக்கப்பட்டுள்ள நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர் ரோபோட் அந்த கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றதா? என ஆராய்ந்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது. செவ்வாயில் உயிரினங்கள் வாழ்வது சாத்தியமா என்ற ஆய்வுக்காகவே பிரத்யேகமாக இந்த ரோவர் ரோபோட் வடிவமைக்கப்பட்டது.

இந்த கிரகத்தில் உள்ள மிக பெரிய பிரமாண்டமான பள்ளத்தாக்குகளில் இந்த ரோபோட் தனது ஆய்வு பயணத்தை தொடங்கியுள்ளது. செவ்வாய் கிரகத்தில் தற்போது ரோவர் ஆராயப் போகும் பள்ளமானது பில்லியன் ஆண்டுகளுக்கு முன் மிக பெரிய ஏரியாக இருந்தது என சொல்லப்படுகிறது. தற்போது நீரின்றி காணப்படும் இந்த சிவப்பு கிரகம் ஒரு காலத்தில் ஈரமாக நீரோட்டத்துடன் இருந்திருக்கிறது.

ஆறு சக்கரங்கள் கொண்ட இந்த ரோபோட்டிக் ரோவர் ஐந்து மைல்கள் தூரம் வரை பயணித்து மாதிரிகளை சேகரிக்கும். மேலும் செவ்வாய் கிரகம் குறித்த பல புதிய தகவல்களையும் ரோவர் நமக்களிக்கும் என நம்பப்படுகிறது. மாதிரிகளை சேகரிப்பதற்க்காக ரோவரில் துளையிடும் வகையில் 7 அடி நீள கருவி பொருத்தப்பட்டுள்ளது.

வரும் 2031-ஆம் ஆண்டு இந்த மாதிரிகளை மற்றொரு ரோவர் மூலம் பூமிக்கு கொண்டு வர நாசா திட்டமிட்டு இருக்கிறது. மேலும் எதிர்காலத்தில் செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் இருப்பதால், கார்பன் டை ஆக்சைடை ஆக்சிஜனாக மாற்றும் கருவியும் ரோபோட்டிக் ரோவருடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன் வெற்றியை பொறுத்து மனிதர்களை செவ்வாய்க்கு அனுப்பும் திட்டத்தை நாசா செயல்படுத்தும்.

 

0 Shares:
You May Also Like
Read More

ரூபாய் 349 ரிச்சார்ஜ் செய்தால் 3ஜிபி டேட்டா தினமும்

ஜியோ நிறுவனம் 3  டேட்டா திட்டங்களை கொண்டுவந்துள்ளது.  அவற்றின் விலை நிலவரம் என்ன ? அவற்றின் நன்மைகள் என்னென்ன ? என்பதை அறிந்து கொள்ள…
Read More

BMW நிறுவனம் 3 புதிய கார்களை அறிமுகப்படுத்தியுள்ளது

ஜெர்மனியை சார்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான BMW செவ்வாய்க்கிழமை அன்று தனது மினி பிராண்டின் கீழ் மூன்று புதிய கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. அனைத்து…
Read More

2021 ராயல் என்ஃபீல்ட் ஹிமாலயன் பிப்ரவரி 11ஆம் தேதி வெளியீடு

ராயல் என்ஃபீல்ட் தனது ஹிமாலயன் சாகச சுற்றுப்பயணத்தை 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 11, சில சிறிய புதுப்பிப்புகளுடன் அறிமுகப்படுத்தும். 2021 ராயல் என்ஃபீல்ட்…
Read More

அதானி நிறுவனத்துடன் கை கோர்க்கும் ஃப்ளிப்கார்ட்

ஃப்ளிப்கார்ட் தனது பொருட்களைக் குறித்த நேரத்தில் வாடிக்கையாளர்களிடம் சேர்க்க அதானி நிறுவனத்துடன் இணைந்துள்ளது. ஃப்ளிப்கார்ட் உலகின் மிகப்பெரிய இ மாகர்ஸ் நிறுவனமான விளங்குகிறது. தற்போது…
Read More

செவ்வாய் கிரகத்தில் 30 வினாடிகள் பறந்த சிறிய ஹெலிகாப்டர்

மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு கருவி, பூமியைத் தாண்டி வேற்று கிரகத்தில் இதுவரை பறந்ததில்லை என்ற நிலையை மாற்றி அமெரிக்க விண்வெளி மையமான நாசா சாதனை…