ரௌத்திரம் பழகு என்பதன் பொருள்: கோபத்தை கட்டுப்படுத்துங்கள் என்று மற்றவர்கள் கூறும் போது “ரௌத்திரம் பழகு” என்று முழங்கினான் பாரதி.

 1. ஒருவர் மீதுள்ள கோபத்தை அதற்கு சம்பந்தம் இல்லாத வேறு ஒருவரிடம் காட்டாதவரை கோபம் தவறில்லை.
 2. பாரதி முழங்கிய “ரௌத்திரம் பழகு” என்பது நம் ஒவ்வொருவருடைய கடமை.

ரௌத்திரம் பழகு என்பதன் பொருள்

 • ரௌத்திரம் என்பது ஒரு வகையான நியாய கோபம் அல்லது ஆத்திரம் என்று கூறலாம். தனக்கோ அல்லது பிறருக்கோ அநீதி நடக்கும் பொழுது அதை துணிவோடு எதிர்த்து தட்டிக் கேட்கும் கோபம்.
 • தேவையான இடத்தில் தேவையான நேரத்தில் நிச்சயம் கோபம் கொள்ள வேண்டும். அந்த கோபத்தில் நியாயம் மட்டுமே இருக்க வேண்டும். இதுவே “ரௌத்திரம் பழகு”.
 • கண்ணுக்கு எதிரே அநீதி நடக்கும் போது அதை எதிர்த்து கேட்பதுதான் தர்மம் ஆனால் இந்த மாதிரியான நேரத்தில் அமைதியாக இருப்பது கோழைத்தனம்.
 • கோபப்பட வேண்டிய நேரத்தில் கோபப்படுவதும் தேவையில்லாத விடயத்தை விட்டு விடுவதும் மிகவும் அவசியம்.

இதை தான் “ரௌத்திரம் பழகு” என்று கூறினான் பாரதி. அனைவரும் இதை கோபம் என்று சொல்லும் போது பாரதி மட்டும் “ரௌத்திரம் பழகு” என்று கூறினான்.

 • ஏதோ ஒரு பெண்ணுக்கு நடக்கும் அநீதிக்கு எதிராக நீ வெளிப்படுத்தும் “ரௌத்திரம்” நாளை நம் வீட்டு பெண்ணை காப்பாற்றும்.
 • திருடும் அரசியல்வாதிக்கு எதிராக நீ வெளிப்படுத்தும் “ரௌத்திரம்” நாளை நல்ல அரசியல்வாதியை உருவாக்கும்.
 • இன்று வெளியே நடக்கும் பல கொலைகள், களவுகள், கற்பழிப்புகள், பெண் வன்கொடுமைகள் அனைத்துக்கும் நாம் அனைவரும் “ரௌத்திரம் பழகாமையே” காரணம்.
 • இன்று வெளியே நடக்கும் அநீதிகள் நாளை நம் வீட்டிற்குள்ளும் நடக்கலாம். தவறை கண்டு தட்டி கேட்காமல் இருப்பது தான் மிகப்பெரிய தவறு. அச்சம் தவிர்த்து “ரௌத்திரம் பழகுவோம்”
 • தவறை கண்டால் கண்டுக்காதே என்பதை விடுத்தது “ரௌத்திரம் பழகு”. தவறு நடந்தால் தட்டிக்கேட்க வேண்டும் என்பதை நம் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்போம். குறிப்பாக பெண் பிள்ளைகளுக்கு.

“ரௌத்திரம் பழகு” என்பது நம் கடமை. ஆணுக்கு அது ஆண்மை.. பெண்ணுக்கு அது கவசம்.