மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தின் கீழ் கடந்த 4 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் மட்டும் 245 கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ரூ.935 கோடி நிதி முறைகேடு நடந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சமூக தணிக்கை விவரங்களை ஆராய்ந்த தனியார் பத்திரிக்கை நிறுவனம் ஒன்று இந்த முறைகேட்டை அம்பலப்படுத்தியுள்ளது.

100 நாள் வேலை திட்டத்தில் லட்சம், அதிக விலைக்கு பொருட்கள் வாங்கியது, வேலைக்கே வராதவர்களுக்கு கூலி கொடுத்ததாக கணக்கு காட்டியது போன்ற முறைகேடுகள் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக தமிழ்நாட்டில் தான் 12,525 கிராம ஊராட்சிகளில் 245 கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாகவும், இதில் 2.07 கோடி ரூபாய் மட்டும் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த முறைகேடு தொடர்பாக ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும் இது தொடர்ப்பாக இருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால் ஒருவர் மீது கூட எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த முறைகேட்டில் தமிழ்நாட்டிற்கு அடுத்தபடியாக ஆந்திரா, கர்நாடகா, பிகார், மேற்குவங்களம், குஜராத் ஆகிய மாநிலங்கள் உள்ளது.