19 வயதிற்குட்பட்ட கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு அணிக்கு ராமேஸ்வரத்தைச் சேர்ந்த சாதனா என்ற மாணவி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

ராமேஸ்வரம் சம்பை பகுதியைச் சேர்ந்த ஆதி என்பவருடைய மகள் சாதனா. இவர் இந்த ஆண்டுதான் 12ஆம் வகுப்பை முடித்து இருக்கிறார். கடந்த ஆண்டு கிரிக்கெட் போட்டிக்காக நல்ல பயிற்சி மேற்கொண்டால் 19 வயதிற்குட்பட்ட தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்கு சாதனா தேர்வாகியுள்ளார். இதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ள சாதனா ராமேஸ்வரத்தில் கிரிக்கெட் மைதானம் இல்லாத போதிலும் பயிற்சியாளர் முயற்சியால் ராமநாதபுரம் சென்று சிறப்பான பயிற்சி பெற்றதாக கூறியிருக்கிறார்.

அடுத்ததாக இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற சிறப்பாக பயிற்சி மேற்கொள்ள இருப்பதாக சாதனா தெரிவித்துள்ளார். ராமேஸ்வரத்தில் கிரிக்கெட் மைதானம் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 17 வயதிற்குட்பட்ட தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்கு தேர்வாகியுள்ள சாதனாவுக்கு 17 வயதாகிறது.