ஆந்திராவில் பொதுமக்களிடம் 10,000 போலி கோழி முட்டைகளை விற்பனை செய்து விட்டு தப்பி ஓடிய வியாபாரியை போலீசார் தேடி வருகின்றனர்.

நெல்லூர் மாவட்டத்தில் உள்ள வாரிகுண்டபாடு மண்டலத்தில் மினி லாரி ஒன்று நேற்று காலை ஊர் ஊராக முட்டை விற்பனை செய்துள்ளது. குறைந்த விலைக்கு தருவதாக கூறியாதல் ஏராளமான மக்கள் முட்டைகளை வாங்கி சென்றுள்ளனர். 30 முட்டைகள் கொண்ட ஒரு பெட்டி 130 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர்.

இதனால் ஒரு மணி நேரத்தில் அனைத்து முட்டைகளும் விற்பனையானது. வாங்கிய முட்டைகளை பயன்படுத்திய பின்னரே அது போலி முட்டை என்பது தெரியவந்துள்ளது. பல மணி நேரமாகியும் முட்டைகள் வேகாமல் இருப்பதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். முட்டை உடைக்கும் முயன்றபோதும் அது உடையவில்லை. அதனால் மொத்தமாக அனைவரும் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பொதுமக்கள் இது குறித்து வாரிகுண்டபாடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து போலி கோழி முட்டையை விற்பனை செய்துவிட்டு தப்பி ஓடிய வியாபாரியை போலீசார் தேடி வருகின்றனர்.