விக்ரம் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘விக்ரம் 60’ இதைப்பற்றிய அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த படத்தில் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து சிம்ரன் நடிக்கவுள்ளார். மேலும் வாணிபோஜன் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிம்ரன் ஏற்கனவே ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் விக்ரமுடன் இணைந்து நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

முதலில் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க உள்ளார் என்று இருந்த நிலையில் தற்போது சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்து.

இந்நிலையில் பாபி சிம்ஹா இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் எல்லா படங்களிலும் பாபி சிம்ஹா தொடர்ந்து நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வருட இறுதியில் இந்த படத்தை வெளியிட திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

விக்ரமுடன் இயக்குனர் சந்தோஷ் நாராயணன் மற்றும் சிம்ரன் ஆகியோர் இணைந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categorized in: