Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add tamilguru.in to your ad blocking whitelist or disable your adblocking software.

×
saravathi potri

சரஸ்வதி 108 போற்றி | Saraswathi 108 Potri in Tamil

அருள்வாக்கும்! சரஸ்வதி 108 போற்றி என்றால் அவரைக் குறித்த 108 பதிகங்கள் அல்லது பாகங்கள். இவை பல கோடிகளை அளித்து அவரை காப்போம். இந்த போற்றிகளை பாராட்டி அவரின் ஆசீர்வாதம் மற்றும் ஞானத்தை பெற விரும்புகிறோம், எங்கள் புனித படிக்கையை மெலும் அதிகரிக்கின்றது என்பது எனக்கு தோன்றுகிறது. இந்த போற்றிகள் அப்படிப் பாராட்டி பெற விரும்புகின்றோம்.

Saraswathi 108 Potri Lyrics Tamil

ஓம் அறிவுருவே போற்றி
ஓம் அறியாமை தீர்ப்பாய் போற்றி
ஓம் அன்பின் வடிவே போற்றி
ஓம் அநுபூதி அருள்வாய் போற்றி
ஓம் அறிவுக்கடலே போற்றி
ஓம் அளத்தற்கு அரியவளே போற்றி
ஓம் அன்ன வாகினியே போற்றி
ஓம் அகில லோக குருவே போற்றி
ஓம் அருளின் பிறப்பிடமே போற்றி

Saraswathi 108 Potri

ஓம் ஆசான் ஆனவளே போற்றி
ஓம் ஆனந்த வடிவே போற்றி
ஓம் ஆதாரசக்தியே போற்றி
ஓம் இன்னருள் சுரப்பாய் போற்றி
ஓம் இகபர சுகம் தருவாய் போற்றி
ஓம் ஈர நெஞ்சம் கொண்டாய் போற்றி
ஓம் ஈடேறச் செய்பவளே போற்றி

ஓம் உண்மைப் பொருளே போற்றி
ஓம் உள்ளத்து உறைபவளே போற்றி
ஓம் ஊமையை பேசவைத்தாய் போற்றி
ஓம் எண்ணம் நிறைவேற்றுவாய் போற்றி
ஓம் ஏடு கையில் ஏந்தியவளே போற்றி
ஓம் ஓங்கார வடிவினளே போற்றி

ஓம் கலைக் களஞ்சியமே போற்றி
ஓம் கற்போர்க்கு இனியவளே போற்றி
ஓம் கலைஞானச் செல்வியே போற்றி
ஓம் கரை சேர்க்கும் கண்ணே போற்றி
ஓம் கலைவாணித் தெய்வமே போற்றி

சரஸ்வதி 108 போற்றி

ஓம் காட்சிக்கு இனியவளே போற்றி
ஓம் காயத்ரியாய் அருள்பவளே போற்றி
ஓம் குருவாக உபதேசிப்பவளே போற்றி
ஓம் குறை தீர்த்தருள்வாய் போற்றி
ஓம் குணக் குன்றானவளே போற்றி
ஓம் குற்றம் பொறுப்பவளே போற்றி
ஓம் சந்தேகம் போக்குவாய் போற்றி

ஓம் சச்சிதானந்தப் பொருளே போற்றி
ஓம் சாந்த சொரூபினியே போற்றி
ஓம் சான்றோர் நெஞ்சினளே போற்றி
ஓம் சாரதாம்பிகையே போற்றி
ஓம் சித்தம் தெளிவிப்பாய் போற்றி
ஓம் சித்தியளிப்பவளே போற்றி
ஓம் சுருதிக்கு ஆதாரமே போற்றி

ஓம் சுத்தஞான வடிவே போற்றி
ஓம் ஞானக்கடலானாய் போற்றி
ஓம் ஞானம் தந்தருள்வாய் போற்றி
ஓம் ஞானப்பூங்கோதையே போற்றி
ஓம் ஞானேஸ்வரியே போற்றி
ஓம் ஞானத்தின் வரம்பே போற்றி

ஓம் ஞான ஆசிரியையே போற்றி
ஓம் ஞானத்தின் காவலே போற்றி
ஓம் தவத்தில் ஆழ்ந்தவளே போற்றி
ஓம் தகைமை தருபவளே போற்றி
ஓம் தஞ்சம் அளிப்பவளே போற்றி
ஓம் தாயான தயாபரியே போற்றி
ஓம் தண்ணருள் தருவாய் போற்றி

ஓம் துதித்தவர்க்கு துணையே போற்றி
ஓம் நவமி தேவதையே போற்றி
ஓம் நவராத்திரி நாயகியே போற்றி
ஓம் நன்னெறி தருபவளே போற்றி
ஓம் நலம் அளிப்பவளே போற்றி
ஓம் நாவிற்கு அரசியே போற்றி
ஓம் நல்லவர்களின் மனமே போற்றி
ஓம் நா நயம் அருள்வாய்போற்றி

Lord saraswathi

ஓம் நான்மறை நாயகியே போற்றி
ஓம் நாவில் உறைபவளே போற்றி
ஓம் நாதத்தின் தலைவியேபோற்றி
ஓம் நாத வெள்ளமானாய் போற்றி
ஓம் நித்திய ஒளிவடிவே போற்றி
ஓம் நிமலையாய் நின்றவளே போற்றி
ஓம் நித்தம் வளர்பவளே போற்றி

ஓம் நிறைவு அளிப்பவளே போற்றி
ஓம் நுட்பம் கொண்டவளே போற்றி
ஓம் பண்ணின் இசையே போற்றி
ஓம் பாட்டின் ஆதாரமே போற்றி
ஓம் பாவலர் நாடும் பண்பே போற்றி
ஓம் பிரணவ சொரூபமே போற்றி
ஓம் பிரம்மனின் நாயகியே போற்றி
ஓம் பிரம்ம ஞான வடிவே போற்றி
ஓம் பிறவிப்பிணி அறுப்பாய் போற்றி

ஓம் பூரண வடிவானவளே போற்றி
ஓம் புவனத்தைக் காப்பவளே போற்றி
ஓம் புத்தகத்தில்உறைபவளே போற்றி
ஓம் மனம்வாக்கு கடந்தவளே போற்றி
ஓம் மங்கல வடிவானவளே போற்றி
ஓம் மந்திரப் பொருளானவளே போற்றி
ஓம் மாயையை அழிப்பவளே போற்றி
ஓம் முனிவர் நெஞ்சமர்ந்தாய் போற்றி
ஓம் முற்றறிந்த அறிவே போற்றி

ஓம் முக்காலம் உணர்ந்தவளே போற்றி
ஓம் மூலமந்திர வடிவினளே போற்றி
ஓம் மூல நாளில் வந்தவளே போற்றி
ஓம் முக்தி அளிப்பவளே போற்றி
ஓம் மேதையாக்குபவளே போற்றி

ஓம் மேன்மை தருபவளே போற்றி
ஓம் யாகத்தின் பலனே போற்றி
ஓம் யோகத்தின் பயனே போற்றி
ஓம் வழித்துணை வருவாய் போற்றி

ஓம் வரம் அருள்பவளே போற்றி
ஓம் வாணி சரஸ்வதியே போற்றி
ஓம் வாக்கின் நாயகியே போற்றி
ஓம் வித்தக வடிவினளே போற்றி
ஓம் வித்யா லட்சுமியே போற்றி

ஓம் வெண்கலை பூண்டவளே போற்றி
ஓம் வெள்ளை மனத்தாளே போற்றி
ஓம் வெண்தாமரையினாளே போற்றி
ஓம் வீணை ஏந்தியவளே போற்றி
ஓம் வீட்டின்பம் தருவாய் போற்றி
ஓம் வேதத்தின் உட்பொருளே போற்றி
ஓம் வையம் வாழ்விப்பாய் போற்றி…

ஓம் சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர்பவது மே சதா

இது சரஸ்வதி தேவியை துதிக்கப் பாவிக்கப்படும் எளிய மந்திர சுலோகம் இது!

தேவி சரஸ்வதி! உனக்கு வணக்கம், வரம் தருபவளே, ஆசைகளின் வடிவானவளே கற்க ஆரம்பிக்கிறேன் எனக்கு இந்த வித்தையை சித்திக்கச் செய் என்பது இதன் பொருள்!

சரஸ் என்பதை சாரையாக வெளிப்படும் நதி என்று வேதங்களை மொழிபெயர்த்தவர்கள் பொருள் கொண்டிருக்கிறார்கள். இதற்கு ஏற்றாற்போல் சரஸ்வதி என்ற நதியும் இருந்திருக்கிறது என்ற அடிப்படையில் கூறப்பட்டதாக இருக்கும்.

ஆனால சரஸ்வதி என்பதன் உண்மைபொருள் தடங்கலற்று சாரையாகப் பாயும் எண்ணங்களை ஒழுங்கு படுத்தும் ஆற்றலைக் குறிக்கும். எவருக்கு தடங்கலற்ற, சீரான சீரிய ஏகாக்கிரம் இருக்கிறதோ அவருக்கு சரஸ்வதியின் அருள் இருக்கிறது என்று அர்த்தம்.

ஆகவே சரஸ்வதி நமஸ்துப்யம் என்றால் சீரான எண்ணத்தை உண்டுபண்ணும் ஆற்றலுக்கு அதிபதியே உனக்கு வணக்கம் என்று பொருள்!

அடுத்த சொல் வரதே காமரூபிணி, சரஸ்வதி காமரூபிணி! இச்சை இல்லாமல் ஒரு செயல் நடைபெற முடியாது. ஆகவே வித்தையை கற்க விரும்புவனுக்கு வித்தை மேல் இச்சையை உண்டுபண்ணும் காமரூபிணி அவள்! வித்தை மேல் காமம் இருந்தால்தான் கற்பதற்குரிய ஆர்வத்தைத் தூண்டும்!

ஆகவே ஒருவன் தனது மனத்தில் எண்ண ஓட்டத்தை சீராக்கிக்கொண்டு, கற்கவேண்டும் என்ற இச்சையுடன் வித்தைய கற்க ஆரம்பிக்க வேண்டும் என்பதை இந்த சுலோகம் மறைமுகமாக சுட்டிக்காட்டுகிறது. இப்படிக் கற்கப்படும் வித்தை சரஸ்வதியின் அருட்கடாக்ஷத்தால் வாய்க்கிறது!

சரஸ்வதி எனும் ஆற்றல் ஒரு விஷயத்தை தெளிவாக, சிறப்பாக, ஆழமாக கற்பதற்குரிய மனதின் ஆற்றல்! இந்த ஆற்றலுடன் அவன் கற்பதற்குரிய இச்சையை வளர்த்துக்கொண்டாலே அவனுக்கு அந்த வித்தை சித்திக்கும்!