சிறுநீரகம் பாதிப்பின் சில அறிகுறிகள்

சிறுநீரகமானது நம் உடலில் உள்ள அனைத்து நச்சுக்களை வெளியேற்றுகிறது. இது பல வகைகளில் உடலின் ஆரோக்கியத்தைக் காக்க துணைபுரிகின்றன.

சுகாதார துறை அமைச்சகம் இந்தியாவில் ஒரு மில்லியன் நபர்களில் 800 பேருக்காவது நாள்பட்ட சிறுநீரக நோய் பிரச்னை உள்ளது என தெரிவித்துள்ளது.

இதில் பலருக்கு தங்களுக்கு சிறுநீரகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது , என்பதே தெரியாமல் இருப்பது அதிர்ச்சியை தரும் செய்தியாக உள்ளது.

நோயானது முதிர்ச்சியடைந்த நிலையில்தான் தெரிந்துகொள்கிறார்கள். இந்த நோயை வளரவிடுவது என்பது பிரச்னைக்குரிய விசயமாக உள்ளது .

அப்படி அத்தகைய நோயை வளரவிட்டால், சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை, டயாலிசிஸ் என பல பெரிய சிகிச்சைகளை சந்திக்க நேரிடும்.

சில அறிகுறிகளை வைத்து சிறுநீரகத்தில் பிரச்சனை இருக்கிறது என்பதை அறிந்துக்கொள்ளலாம்.

சிறுநீர் பிரச்னை

நுரைபோன்ற சிறுநீர் வருவது, இயல்பைவிட குறைவாக அல்லது அதிகமாக சிறுநீர் கழிப்பது, சிறுநீர் தொற்று ஏற்படுவது ,சிறுநீரில் ரத்தம் கலந்து வருவது, அடிக்கடி சிறுநீர் கழிப்பது, சிறுநீர் வருவது போன்ற உணர்வு இருந்தாலும் சிறுநீர் கழிக்க முடியாமல் போவது மற்றும் எரிச்சல் உணர்வு சிறுநீர் கழிக்கும்போது ஏற்படுவது.

வீக்கம் / அதைப்பு

நமது உடலில் தேங்கியுள்ள தேவையற்ற நீரை, சிறுநீரகம் வெளியேற்றும். இது வெளியேற முடியாமல் போனால் குறிப்பாக முகத்தில் வீக்கம் வரும். மேலும் கால் மற்றும் கணுக்கால் , பாதம், கைகள் ஆகியவற்றிலும் வீக்கம் ஏற்படும்.

சோர்வு / ரத்தசோகை

சிறுநீரகம் எரித்ரோபோய்டின் என்ற ஹார்மோனைச் சுரக்கிறது.இந்த ஹார்மோனானது ஆக்சிஜன், இரத்த சிவப்பணுக்களை கொண்டு செல்வதற்கு பயன்படுகிறது. எரித்ரோபோய்டின் ஹார்மோனின் அளவு குறையும்போது சிறுநீரகமானது பாதிப்படையும். இதனால் சோர்வும், ரத்தசோகையும் ஏற்படும்.

தடிப்பு

சிறுநீரகத்தின் செயல்பாடு குறைந்தால் உடலில் கழிவுகள் அதிகமாகச் சேரும். அதிகமான வெடிப்பு மற்றும் தடிப்புகள் தோல்களில் உண்டாகும். இதைவைத்து நாம் சிறுநீரகத்தின் செயல்பாடுகள் குறைந்து வருகிறது என அறியலாம். மேலும் ஆக்சிஜன் மூளைக்கு குறைவாக சென்றால் கவனமின்மை, மறதி, தலைசுற்றல் போன்றவைகளும் உருவாகும்.

குளிர்

அடிக்கடி குளிர்வது போன்ற உணர்வு ரத்தசோகை காரணமாக ஏற்படும் . சிலருக்கு வெயில் படும் நேரத்திலும் தாங்க முடியாத அளவுக்கு குளிர் ஏற்படும்.

மூச்சுத்திணறல்

ஆக்சிஜனின் அளவு சிவப்பு ரத்த அணுக்களில் குறைவதால், தேவையற்ற திரவம் குடலிலேயே தங்கிவிடுவதாலும் மூச்சுத்திணறல் ஏற்படும்.

சிறுநீரகம் சரியாக செயல்படாத போது முதுகுவலி, குமட்டல்,சுவாசத்தில் வாடை போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

பாலிசிஸ்டிக் ஓவரி பிரச்னை உள்ளவர்களுக்கு முதுகுவலி அடிக்கடி ஏற்படும். இன்னும் சிலருக்கு சிறுநீரகத்துக்கு அருகிலேயே வலி தோன்றும். இந்த அறிகுறி வெகு சிலருக்கு மட்டுமே இருக்கும்.

மேலே குறிப்பிட்டுள்ள அறிகுறிகள் ஏதாவது உங்களுக்கு தோன்றினால், உடனே சிறுநீரக சிறப்பு மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது மிகவும் நல்லது. சிறுநீரக பிரச்சனை இல்லாமல் இருப்பது நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

0 Shares:
You May Also Like
பட்டா சிட்டா ஆன்லைன் பதிவிறக்கம் செய்வது எப்படி
Read More

பட்டா சிட்டா ஆன்லைன் பதிவிறக்கம் செய்வது எப்படி

  பட்டா சிட்டா ஆன்லைன் சேவைகள் எங்கும் செல்லாமல் ஆவணத்தை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்ய படிப்படியான செயல்முறையை வழங்குகிறது. பட்டா சிட்டா என்றால் என்ன?…
makkamishi song lyrics
Read More

மக்காமிஷி | Makkamishi Song Lyrics & Video

Makkamishi – “மக்காமிஷி” எனும் கவர்ச்சியான பாடல், ஜெயம் ரவியின் நடிப்பில் உருவான “பிரதர்” திரைப்படத்தின் முதல் ஒரு தனிப் பாடலாகும். இந்த இனிமையான…
Read More

சிறந்த தமிழ் பைபிள் வசனங்கள் மற்றும் quotes

சிறந்த தமிழ் பைபிள் வசனங்கள் மற்றும் quotes அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்: பிரசங்கி 3:11 நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என்…