Dark Mode Light Mode

நரம்பு சுருட்டல் பாதிப்பிலிருந்து நிவாரணம் பெற சில குறிப்புகள்..!

வெரிக்கோஸ் வெயின் என்ற நரம்பு சுருட்டல் பாதிப்பு ஆண்களை விட பெண்கள் தான் அதிகமாக தாக்குகிறது. ஒரே இடத்தில் அதிக நேரம் நின்று கொண்டு இருந்தாலோ அல்லது உட்கார்ந்திருந்தாலோ கால்களில் நரம்பு முடிச்சு உருவாகும். குறிப்பாக கர்ப்பிணி பெண்கள், ஒரே இடத்தில் இருப்பவர்கள், வாகன ஓட்டுனர்கள், காவல் வேலை செய்பவர்கள் போன்றோர்க்கு இந்த நோய் தொற்றிக்கொள்ளுமாம். இந்த நோய் அதிகமான வலியை ஏற்படுத்தும்.

நரம்பு சுருட்டல் பாதிப்பு ஏற்பட்டால் பாதங்களில் அரிப்பு, வீக்கம் மற்றும் வலி அதிகமாக ஏற்படும். இதனால் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை கூட மேற்கொள்ளப்படும் நிலை உருவாகும்.

ரத்த ஓட்டத்தில் பிரச்சனைகள், உடற்பயிற்சி போதிய அளவில் இல்லாமல் இருப்பது, ஹார்மோன் மாற்றங்கள், வயது, ஜீன் ஆகியவற்றால் இந்த வெரிகோஸ் பிரச்சனை உண்டாகும். நரம்பு சுருட்டலினால் பெரும் பாதிப்பு இல்லையென்றாலும் அப்படியே விட்டால் பிரச்சனைகள் தரும்.

Advertisement

நரம்பு சுருட்டல் பாதிப்பு குணமாக சில மருத்துவ குறிப்புகள்:

குப்பைமேனி, நெருஞ்சில், வில்வம், சுண்டைக்காய் மற்றும் சிறிய வெங்காயம் ஆகியவற்றை அரைத்து நரம்புச்சுருட்டல் உள்ள இடத்தில் தடவி வந்தால் நரம்பு சுருட்டல் பாதிப்பு நிவாரணம் பெரும்.

துளசி, வசம்பு, மஞ்சள், சோற்றுக் கற்றாழை ஜெல் ஆகிய அனைத்தையும் நன்கு அரைத்து, நரம்புச் சுருட்டலுக்கு மேல் தொடர்ந்து 2 அல்லது 3 வாரங்கள் தடவி வந்தால் நரம்புச்சுருட்டல் வலி குறையும்.

அத்திக்காயில் வரும் பாலை நரம்புச் சுருட்டல்களுக்கு மேல் தடவி, 3 மணி நேரம் அல்லது 2 மணி நேரம் காயவிட்டு வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் செய்தால் நரம்பு சுருட்டல் சரியாகும்.

எறும்பு புற்றுமண், சுத்தமான மண் ஆகிய இரண்டையும் சிறிதளவு எடுத்து நீரில் கலந்து நரம்பு முடிச்சு உள்ள பகுதியில் தடவி ஒரு மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால் வீக்கம், வலி குறையும்.

மூட்டுகளுக்கும், நரம்புகளுக்கும் வலுப்படுத்தும் மூலிகை எண்ணெய்கள்நிறைய உண்டு. அதில் ஒன்றை தேர்வு செய்து இலேசாக சூடு செய்து நேரடியாக நரம்பு முடிச்சு இருக்கும் பகுதியில் தேய்க்காமல் சற்று கீழிலிருந்து தேய்த்து நரம்பு முடிச்சு இருக்கும் பகுதியில் இலேசாக அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்தால் படிப்படியாக நரம்பு வலி நிவாரணம் அடையும்.

நரம்பு சுருட்டல் பாதிப்புள்ளவர்கள் தவிர்க்க வேண்டியது

நீண்ட நேரம் நடப்பதையும், உட்காருவதையும் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

உடல் எடை அதிகமாக இருந்தால், நரம்புச் சுருட்டல் பிரச்சனை ஏற்படும். அதனால் உடல் எடையை சரியான அளவில் வைத்துக்கொள்ள வேண்டும். மேலும் இவர்கள் தினமும் முறையான உடற்பயிற்சிகள் செய்வது மிகவும் நல்லது.

இறுக்கமான ஆடைகள் அணிவதையும், ஹை ஹீல்ஸ் காலணிகள் அணிவதையும் பெண்கள் தவிர்க்க வேண்டும்.

தவிர்க்க வேண்டிய உணவு

எண்ணையில் பொரித்த உணவுகள், வறுத்த மற்றும் துரித உணவு வகைகள், குளிர்பானங்கள், இனிப்பு பொருட்கள் மற்றும் தயிர் ஆகியவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

ஊறுகாய் மற்றும் அசைவ உணவுகள் சாப்பிடுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

Previous Post

தமிழ்நாடு புதுசேரி இடையிலான பேருந்து சேவை இன்று தொடங்கியது

Next Post

நீட் தேர்வு செப்டம்பர் 12 ஆம் தேதி நடைபெறும் - ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு

Advertisement
Exit mobile version