தமிழ் எழுத்துக்கள்
” எவன் ஒருவன் தமிழின் சுவையை உணர்கிறானோ அவன் தாய் பாலின் சுவை அறிவான் என்று கருதலாம்”
தமிழ் மொழி:
“தமிழுக்கும் அமுதென்று பேர் – அந்தத்
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்”
- என்ற பாரதிதாசன் அவர்களின் வரிகளின் வாயிலாக தமிழ் மேல் நாங்கள் கொண்ட பற்றை அறிந்துகொள்ளலாம். வெளிநாட்டு மக்களாலும் வாசிக்கப்பட்டு வருகிறது தமிழ் மொழிக்கு இலக்கியம் அதிகம். தமிழ் மொழி 2000 வருடங்களுக்கு மேல் வாழ்ந்து கொண்டிருக்கும் மொழி. தொல்காப்பியம், திருக்குறள், அகநானூறு புறநானூறு என்று ஏராளமான படைப்புகள் தமிழ் மொழியில் உள்ளது. அவை பிற வெளிநாட்டவர்களால் மொழி பெயர்க்கபட்டு வாசிக்கப்படுகிறது.செம்மொழி ஆனா தமிழ் மொழி மிகவும் எளிமையானது மற்றும் மிகவும் ஆழமானது. ஆனால் மிக எளிதாக கற்றுக்கொள்ளலாம்.
- தமிழில் மொத்தம் 247 எழுத்துக்கள் உள்ளன. அதில் 12 உயிர் எழுத்துக்கள் , 18 மெய் எழுத்துக்கள், 216 உயிர்மெய் எழுத்துக்களும், மற்றும் 1 ஆயுத எழுதும் அடங்கும். ஆக இந்த மொத்த எழுத்துக்களையும் பற்றி கீழே விரிவாக காணலாம்.
உயிர் எழுத்துக்கள் :
- தமிழ் மொழியில் மொத்தம் 12 உயிர் எழுத்துக்கள் உள்ளன. இந்த எழுத்துக்களை vowels என்று ஆங்கிலத்தில் கூறுவர்.
குறில்:- அ, இ, உ, எ, ஒ ஆகிய ஐந்தும் குறில்களாம். இவற்றைக் குற்றெழுத்து என்றும் கூறுவர்.
நெடில்:- ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள ஆகிய ஏழும் நெடில்களாம். இவற்றை நெட்டெழுத்து என்றும் கூறுவர். இங்கே கூறப்பட்ட சில உயிர்கள் (ஐ, ஒள) தன் இயல்பான அளவிலிருந்து குறுகி ஒலிப்பதும் உண்டு.
இந்த 12 எழுத்துக்கள் தமிழின் உயிரெழுத்து ஆகும்.
ஆயுத எழுத்து :
- தமிழில் உள்ள ஆயுத எழுத்துக்கள் மொத்தம் ஒரே ஒரு எழுத்து தான். இந்த எழுத்தை அக்கு என்று உச்சரிக்க வேண்டும். ஆய்த எழுத்தினைத் தனிநிலை என்றும் கூறுவர்.
மெய் எழுத்துக்கள் :
- தமிழில் மொத்தம் உள்ள மெய் எழுத்துக்கள் 18. மெய் என்றல் உடல் என்று தமிழில் பொருள். இந்த மெய் எழுத்துக்கள் மொத்தம் மூன்று வகைப்படும் வல்லினம்,மெல்லினம்,இடையினம்.
வல்லினம் மெல்லினம் இடையினம் :
- க,ச,ட,த,ப,ற என்ற வல்லின எழுத்துக்கள்ஆறும் மார்பினை இடமாகக் கொண்டு பிறக்கின்றன. நாம் இந்த எழுத்துக்களை உச்சரிக்கும் பொழுது இந்த எழுத்துக்கள் எல்லாம் நமது மார்பக பகுதியில் இருந்து எழும்
- ங,ஞ,ண,ந,ம,ன என்ற மெல்லின எழுத்துகள் ஆறும் மூக்கினை இடமாகக் கொண்டு பிறக்கின்றன. நாம் இந்த எழுத்துக்களை உச்சரிக்கும் பொழுது இந்த எழுத்துக்கள் எல்லாம் நமது மூக்கு பகுதியில் இருந்து எழும்.
- ய, ர, ல, வ, ழ, ள என்ற இடையின எழுத்துகள் ஆறும் கழுத்தை இடமாகக் கொண்டு பிறக்கின்றன. நாம் இந்த எழுத்துக்களை உச்சரிக்கும் பொழுது இந்த எழுத்துக்கள் எல்லாம் நமது கழுத்து பகுதியில் இருந்து எழும்.
- வரிசைப்படி பார்த்தால் வல்லினம் (வலிமையான) > இடையினம் > மெல்லினம் ( வலிமை அற்ற) என்று இருக்க வேண்டும்.
த- வல்லினம்
மி- மெல்லினம்
ழ்- இடையினம்
உயிர் மெய் எழுத்துக்கள் :
ஒரு மெய் எழுத்துடன் ஓர் உயிர் எழுத்து சேர்ந்து பிறக்கக்கூடிய எழுத்து உயிர்மெய் எழுத்து ஆகும்.
எடுத்துக்காட்டு:
‘க்’ என்னும் மெய்யும் ‘அ’ என்னும் உயிரும் சேர்வதால் ‘க’ என்னும் உயிர்மெய் பிறக்கின்றது. இவ்வாறு பன்னிரண்டு உயிர் எழுத்துக்களும் பதினெட்டு மெய் எழுத்துக்களுடன் சேர்வதால் (18 X 12) 216 உயிர் மெய் எழுத்துக்கள் பிறக்கின்றன.
தமிழ் எழுத்துக்கள் தோற்றமும் வளர்ச்சியும் :
தமிழை கற்பி:
தமிழ் மொழியின் சுவையோ குன்றாத ஒன்று. தேனும் கூட அளவுக்கு மீறினால் திகட்ட ஆரம்பிக்கும் ஆனால் நம் அமுத மொழி தமிழோ திகட்டாத அமிர்தம். தமிழை கற்று தமிழ் மொழியின் பெருமையை உலகமெங்கும் பரப்புவோம். வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தமிழை கட்டாயம் கற்று தர வேண்டும்.தமிழை மட்டும் கற்று கொள்ளாமல் இலக்கணம், உரைநடை என அனைத்தும் படித்து அறிவை வளர்க்க வேண்டும். “நீ ஒரு புத்தகத்தை படிக்கும் பொழுது ஒரு புது வாழ்க்கை அனுபவத்தை கற்று கொள்கிறாய்” என்று புலவர் நா.முத்துக்குமார் கூறுவார். நமது தாய் தமிழின் புகழ் ஓங்கட்டும், தமிழர் தலை எங்கும் நிமிரட்டும்