தமிழகத்தில் இரண்டாம் கட்ட அலையாக கொரோனா வைரஸ் பரவரும் நிலையில் அதை தடுக்க, முதல் கட்டமாக 50 சதவீத கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

மாநிலம் விட்டு மாநிலம் செல்பவர்களுக்கு இ – பாஸ் கட்டாயமாகியுள்ளது. அவசியமற்ற கூட்டங்களுக்கு, முழு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

மதம் சார்ந்த கூட்டங்களுக்கும் மற்றும் திருவிழாக்கள் சார்ந்த கூட்டங்களுக்கும்,சில்லரை வியாபார கடைகளுக்கும்,வணிக வளாகங்களுக்கும் நாளை முதல் தடை விதிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

பொது இடங்களில் மக்கள் மாஸ்க் அணியாமல் இருப்பதாலும், வழிகாட்டு நெறிமுறைகளை பணியிடங்களில் பின்பற்ற தவறுவதாலும், கொரோனா நோய் தொற்று சமீபத்தில் அதிகரித்து வருகிறது.

கடந்த மாதம் மார்ச் 28ல் கொரோனா காரணமாக 13,070 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் இது 27 ஆயிரத்து 743 ஆக உயர்ந்துள்ளது.

இதனால் தற்போது மறு உத்தரவு வரும் வரை, சில செயல்பாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.நோய் தொற்றை கட்டுப்படுத்தவும், பொது மக்கள் நலன்களை கருதியும், ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள சில செயல்பாடுகளுக்கு முற்றிலுமாக தடை விதித்து, சில செயல்பாடுகளுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்புகள்:

 • தற்போதுள்ள நடைமுறைகளின்படி, நோய் கட்டுப்பாடு உள்ள பகுதிகளில் எந்தவிதமான தளர்வுகளும் இன்றி, ஊரடங்கு முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும்.
 • சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை தொடரும். மேலும் சில்லரை வியாபார கடைகளுக்கும், சென்னை கோயம்பேடில் உள்ள வணிக வளாகங்களுக்கும், மாவட்டங்களில் உள்ள மொத்த வியாபார காய்கனி வளாகங்களுக்கும் முழு தடை விதிக்கப்பட்டுள்ளது.
 • அனைத்து நிறுவனங்களும் கை சுத்திகரிப்பான் உபயோகப்படுத்துவதையும், முக கவசம் அணிவதையும் உறுதி செய்ய வேண்டும். முக கவசம் அணியாமல் இருப்போரை கட்டாயமாக அனுமதிக்க கூடாது.
 • திருமண நிகழ்விலும் 100 பேர் மட்டும் அனுமதிக்க வேண்டும். கேளிக்கை விடுதிகள், பொழுதுபோக்கு அரங்கங்கள், பூங்காக்கள் ஆகிய இடங்களில் 50 சதவீத மக்கள் மட்டும் அனுமதிக்கப்படவேண்டும்.
 • சின்னத்திரை மற்றும் திரைப்பட படப்பிடிப்புகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும். இதில் பங்கேற்கும் பணியாளர்கள் மற்றும் கலைஞர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளவேண்டும். மேலும் இவர்கள் கட்டாயமாக முக கவசம் அணியவேண்டும்.
 • பேருந்துகளில் பயணம் செய்பவர்கள் இடைவெளிவிட்டு அமரவேண்டும், ரயில் நிலையங்களில் அதிக மக்கள் கூட்டம் கூட அனுமதிக்கக்கூடாது .
 • காய்கறி கடைகள், பலசரக்கு கடைகள், சோரூம்கள் போன்ற இடங்களில் 50 சதவீத மக்கள் மட்டும் அனுமதிக்கவேண்டும் .
 • அனைத்து வழிபாட்டு தலங்களிலும், பொதுமக்கள் வழிபாடு இரவு 8:00 மணி வரை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.
 • உணவகங்கள், டீ கடைகள் போன்ற இடத்தில் 50 சதவீத மக்கள் மட்டும் இருக்கவேண்டும். இரவு 11 வரை மட்டும் அனுமதி அளிக்கப்படவேண்டும்.
 • ஆட்டோக்களில் இருவர் மட்டும் தங்களின் பயணத்தை மேற்கொள்ளவேண்டும்.
 • விளையாட்டு அரங்குகளில் மற்றும் மைதானத்தில் பார்வையாளர்கள் இல்லாமல், விளையாட்டுப் போட்டிகள் நடத்த அனுமதி வழங்கி உள்ளது.

இதுபோன்ற நடவடிக்கை மூலம் கொரோனா நோய்யை கட்டுப்படுத்த முடியும் என்று தமிழக அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.