சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க செல்பவர்களுக்கு சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு முடிவு

- Advertisement -

தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்ட மன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தலில் வாக்களிக்க பலரும் தங்களுடைய சொந்த ஊருக்கு செல்வார்கள். அவர்களின் வசதிக்காக சிறப்பு போருந்துகளை இயக்க அரசு முடிவு செய்துள்ளது.

போக்குவரத்துத்துறை செயலளர் சி.சமயமூர்த்தி தலைமையில் சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் சட்டமன்ற தேர்தலை ஒட்டி சிறப்பு பேருந்துகள் இயக்குவதற்க்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பேசப்பட்டது. இந்த கூட்டத்தில் சி.சமயமூர்த்தி, ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ள சட்ட மன்ற தேர்தலில், பொது மக்கள் பாதுகாப்பாக தங்கள் சொந்த ஊருக்கு சென்று வாக்களித்து திரும்பிட சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று கூறினார்.

- Advertisement -

ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் ஏப்ரல் 5ஆம் தேதி வரை சென்னையில் இருந்து வழக்கமாக இயங்கக்கூடிய 2,225 பேருந்துகளுடன் 3,090 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. சேலம், பெங்களூரு, கோவை, திருப்பூர் ஆகிய இடங்களில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு 2,644 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

வாக்குப்பதிவு முடிந்த பிறகு பொது மக்கள் சொந்த ஊர்களில் இருந்து சென்னைக்கு திரும்ப வழக்கமாக இயக்கப்படும் 2,225 பேருந்துகளுடன் ஏப்ரல் 6 மற்றும் 7 ஆம் தேதிகளில் 2,115 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

சேலம், திருச்சி, தேனி, மதுரை ஆகிய இடங்களில் இருந்து திருப்பூர், கோவைக்கு வருவதற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதேபோல் சேலம், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய இடங்களில் இருந்து பெங்களூர் வருவதற்கு மொத்தம் 1,738 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

கொரோனா தடுப்பு வழிமுறைகளை பேருந்துகளில் தீவிரமாக பின்பற்ற படும். இதற்கு பொது மக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும். www.tnstc.in மற்றும் tnstc என்ற செயலி மூலமாகவும், பேருந்து மையங்கள் மூலமாவும் சிறப்பு பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -

Recent Articles

Related Stories

Stay on op - Ge the daily news in your inbox