• புதுச்சேரியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கும், துணை நிலை ஆளுநராக இருந்த கிரண் பெடிக்கும் இடையே கடுமையான மோதல் உருவாகி வந்தது.
  • துணை நிலை ஆளுநரை மாற்றவேண்டும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி போர்க்கொடி எழுப்பி வந்தார். இதை தொடர்ந்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிப்ரவரி 16 ஆம் தேதி கிரண் பெடியை திரும்பப்பெறுவதாக கூறினார்.
  • இதற்கிடையே, தெலுங்கானாவில் 2- வது ஆளுநராக இருக்கும் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூடுதல் பொறுப்பாக புதுச்சேரி மாநில ஆளுநர் பொறுப்பையும் கவனித்துக்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டது.
  • இந்தநிலையில், இன்று காலை 9 மணிக்கு, புதுச்சேரி துணை நிலை ஆளுநராக டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பொறுப்பேற்றுக்கொண்டார்.
  • புதுச்சேரியில் ஆளுநர் கிரண்பேடி நீக்கப்பட்டதை தொடர்ந்து, பொறுப்பு ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் இன்று பொறுப்பு ஏற்றார்.
  • சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி தமிழிசை சவுந்தரராஜனுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
  • புதுச்சேரியில் 5-வது பெண் துணை நிலை ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் பதவி ஏற்றார்.இந்த பதவி ஏற்பு விழாவில் முதல்-மந்திரி நாராயணசாமி கலந்துகொண்டார்.