702 AC பேருந்துகளை இயக்காததால் மாநில போக்குவரத்து நிறுவனங்கள் பெரும் நிதி இழப்பை சந்தித்தன.

தொழில்கள், பணியிடங்கள் மற்றும் குழந்தைகளை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு கொண்டு செல்லும் தனியார் பஸ் ஆபரேட்டர்கள், ஏசி பஸ் சேவைகளை தடை செய்யும் உத்தரவுகளை ரத்து செய்யுமாறு மாநில அரசையும் வலியுறுத்தினர்.

தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் AC பேருந்துகளை இயக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆனால் சில கட்டுப்பாடுகளுடன் AC பேருந்துகளை இயக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

பேருந்தில் 24 செல்சியஸ் முதல் 30 செல்சியஸ் வரை வெப்பநிலையை பராமரித்தல் மற்றும் புதிய காற்றை உட்கொள்வது சாத்தியமாக இருக்க வேண்டும்.

தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் வியாழக்கிழமை பிறப்பித்த அரசாங்க உத்தரவின்படி, 65 வயது முதிர்ந்த குடிமக்கள் மற்றும் (comorbidity)கொமொர்பிடிட்டி உள்ளவர்கள் ஏசி பேருந்துகளில் பயணிக்க அனுமதிக்கக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது.

See also  சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு ரத்து