முன்னாள் முதலமைச்சரும் நடிகையுமான ஜெ.ஜெயலலிதா அவர்கள் 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி காலமானார். அவருடைய வாழ்கை வரலாற்றை படமாக எடுக்கப்பட்டு உள்ளது. இந்த திரைப்படத்தில் கங்கனா ரணாவத் கதாநாயகியாக நடித்து உள்ளார். தலைவி திரைப்படம் தமிழ், ஹிந்தி என இரு மொழிகளில் தயாராகியுள்ளது.

பாகுபலி திரைப்படத்தின் இயக்குனர் ராஜமௌலின் தந்தை கே.வி. விஜயேந்திர பிரசாத் தலைவி திரைப்படத்தின் கதையை எழுதி உள்ளார். விஜய் இயக்கும் இந்த திரைபடத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். விஷ்ணுவர்தன் இந்தூரி, சைலேஷ் ஆர்.சிங் ஆகியயோர் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.

தலைவி திரைப்படம் ஏப்ரல் 23 ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில் அதன் வெளியீடு தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. திரைப்பட துறையினர் இந்த திரைப்படத்திற்கு U சான்றிதழ் வழங்கியுள்ளனர். கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு உள்ளன. திரையரங்குகள் திறந்த பிறகு தலைவி திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தலைவி திரைப்படத்தின் புதிய புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

See also  ஏப்ரல் 7 ஆம் தேதி முதல் போக்குவரத்து கழகங்கள் ஸ்டிரைக்

Categorized in: