டாக்டர் பணிக்கு தன் வாழ்வை அர்ப்பணித்த மருத்துவர் சாந்தா மறைவு

மருத்துவர் சாந்தா உடல்நலக் குறைவால் காலமானார்.இவருக்கு வயது 93. சாந்தாவுக்கு ஏற்கனவே ஆஸ்துமா பாதிப்பு இருந்ததால் அவ்வப்போது சுவாச பிரச்சனை ஏற்பட்டுள்ளது.  அதற்காக சிகிச்சையும் எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சிலநாட்களாக அவருக்கு உடலநலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை அவருக்கு சுவாசிப்பதில் சிரமம்  ஏற்பட்டுள்ளது. அதனால் தனியார்  மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சில மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வீடு திரும்பினார். பின்னர் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு மீண்டும் மருத்துவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனிற்றி 19.01.2021 இன்று காலை 3.30 மணிக்கு காலமாகிவிட்டார்.

அனைவருடைய மனதிலும் நீங்காத இடத்தை பெட்ரா இவருக்கு பிரதமர் மோடி,  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட பல்வேறு  அரசியல் கட்சித் தலைவர்களும்  இரங்கல் தெரிவித்துள்ளனர்.

புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு  பணியில் அகில இந்திய அளவில்  சிறந்த முன்னோடியாக திகழ்ந்தவர்.   மேலும் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் 60  ஆண்டிற்கும் மேலாக  தலைவராக பணியாற்றி உள்ளார்.

மேலும் இவருடைய மருத்துவ சேவைக்காக பத்ம விபூஷண் உள்ளிட்ட பல்வேறு  விருதுகள் கிடைத்துள்ளது.
பொதுமக்களுக்கு புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை மேற்கொள்வதற்கு முக்கிய பங்காற்றியுள்ளார்.

இவரது உடல் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் பொது மக்களின்  அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மருத்துவரின் உடல் அனைத்து அரசு மரியாதையுடன் நல்லடக்கம்  செய்யப்படும் என அறிவித்து உள்ளார்

0 Shares:
You May Also Like
Read More

பட்டா சிட்டா ஆன்லைன் பதிவிறக்கம் செய்வது எப்படி

  பட்டா சிட்டா ஆன்லைன் சேவைகள் எங்கும் செல்லாமல் ஆவணத்தை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்ய படிப்படியான செயல்முறையை வழங்குகிறது. பட்டா சிட்டா என்றால் என்ன?…
Read More

மக்காமிஷி | Makkamishi Song Lyrics & Video

Makkamishi – “மக்காமிஷி” எனும் கவர்ச்சியான பாடல், ஜெயம் ரவியின் நடிப்பில் உருவான “பிரதர்” திரைப்படத்தின் முதல் ஒரு தனிப் பாடலாகும். இந்த இனிமையான…
Read More

சிறந்த தமிழ் பைபிள் வசனங்கள் மற்றும் quotes

சிறந்த தமிழ் பைபிள் வசனங்கள் மற்றும் quotes அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்: பிரசங்கி 3:11 நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என்…