சட்டமன்ற தேர்தல் நேற்று ஒரே கட்டமாக தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலத்திலும் , புதுச்சேரியிலும் நடைபெற்றது.

தமிழகத்தில் அ.தி.மு.க வுக்கும், தி.மு.க.வுக்கும் இடையே போட்டி பலமாக இருந்தாலும் 5 முனைப்போட்டி நிலவியது.

மொத்தம் உள்ள 234 தொகுதிகளிலும் 3,998 வேட்பாளர்கள் களத்தில் இருந்தார்கள். மேலும் தமிழகத்தில் 6,28,69,955 பேர் மக்கள் வாக்களிக்க இருந்தார்கள்.

தமிழ்நாட்டில் நேற்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் ஆரம்ப கட்டத்திலே ஆர்வத்துடன் வந்து ஓட்டுப்போடத் தொடங்கினார்கள்.

கடுமையான வெயிலிலும் மக்கள் உற்சாகமாக வாக்களிக்க வந்தார்கள். மேலும் அங்குள்ள தேர்தல் அதிகாரிகள் வாக்காளர்களை முக கவசத்துடன் வாக்குச்சாவடி அருகே அனுமதித்தார்கள்.

தமிழ்நாட்டில் பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் காலையில் இருந்தே மிகவும் ஆர்வமாக வந்து வாக்காளர்கள் ஓட்டு போட்டதை பார்க்கமுடிந்தது.

தமிழ்நாட்டில் நேற்று காலை 9 மணி நிலவரப்படி 13.80 சதவீத வாக்கும், காலை 11 நிலவரப்படி 26.90 சதவீத வாக்கும் பதிவாகியிருந்தது.

மதியம் 1 மணி நிலவரப்படி 39.61 சதவீத வாக்கும், மாலை 3 மணி நிலவரப்படி 53.35 சதவீத வாக்கும், மாலை 5 மணி நிலவரப்படி 63.60 சதவீத வாக்கும், இரவு 7 மணி நிலவரப்படி 71.79 சதவீத வாக்கும் பதிவாகி இருந்தது.

தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்கு எந்திரங்கள், கட்சி ஏஜெண்டுகள் முன்னிலையில் ‘சீல்’ வைக்கப்பட்டது.

மேலும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று இரவே வாக்கு எண்ணும் மையத்திற்கு வாக்கு எந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டது .

தற்போது தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, தொகுதி வாரியாக வாக்குப்பதிவு விவரங்களை வெளியிட்டு இருக்கிறார். அவர் கூறியதாவது:

  • தமிழக சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் 72.78 சதவீத வாக்குகள் பதிவாகி இருக்கிறது.
  • அதிகபட்சமாக பாலக்கோடு தொகுதியில் 87.33 சதவீத வாக்குகள் மட்டும் பதிவாகி இருக்கிறது .
  • குறைந்தபட்சமாக சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் 55.52 சதவீத வாக்குகள் மட்டும் பதிவாகி உள்ளது.
  • அடுத்து வாக்குகள் அதிகம் பதிவான 5 தொகுதிகள்:
  • குளித்தலை – 86.15%
    எடப்பாடி – 85.6%
    அரியலூர் – 84.58%
    கிருஷ்ணராயபுரம் – 84.14%
    கரூர் – 83.92%
  • முதலமைச்சர் போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் 85.6 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.
  • திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் 60.52 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.
  • ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடும் போடியில் 73.65 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.
  • கமல்ஹாசன் போட்டியிடும் கோவை தெற்கு தொகுதியில் 60.72 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது
  • டிடிவி தினகரன் போட்டியிடும் கோவில்பட்டி தொகுதியில் 67.43 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.
  • நாம் தமிழர் கட்சி சீமான் போட்டியிடும் திருவொற்றியூரில் 65% வாக்குகள் பதிவாகி உள்ளது.
  • பாஜக மாநில தலைவர் எல் .முருகன் போட்டியிடும் தாராபுரம் தொகுதியில் 74.14 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.
  • திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடும் சேப்பாக்கம் தொகுதியில் 58.41சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.
  • பாஜக சார்பில் நடிகை குஷ்பு போட்டியிடும் ஆயிரம் விளக்கு தொகுதியில் 58.4 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.
See also  கொரோனா பரவல் காரணமாக JEE மெயின் தேர்வுகள் ஒத்திவைப்பு

என்று அவர் கூறினார்.