நயன்தாரா விக்னேஷ் சிவன் இணைத்து இயக்கும் திரைப்படம் ‘கூழாங்கல்’ இத்திரைப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று கூறியுள்ளனர். இத்திரைப்படம் குடிகார அப்பாவுக்கும் மகனுக்கும் இடையே உள்ள கதையை சொல்லும் படம் இது. கூழாங்கல் திரைப்பட இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் மற்றும் யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

கூழாங்கல் திரைப்படத்தை ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் கடந்த வியாழக்கிழமை திரையிட்டனர். திரைப்பட விழாவில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் கலந்து கொண்டனர். இந்த விழாவில் கூழாங்கல் திரைப்படத்திற்கு ‘டைகர்’ விருது வழங்கப்பட்டது. இந்த விருதை பெற்ற முதல் தமிழ் திரைப்படம் கூழாங்கல் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் டைகர் விருதை வென்ற இரண்டாவது இந்திய படம் கூழாங்க்ல் ஆகும்.

விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூழாங்கல் படத்திற்கு டைகர் விருது கிடைத்திருக்கிறது. எங்களின் கடின உழைப்பு, பொறுமை, கனவு வீணாகவில்லை. உங்களின் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.

Categorized in: