- இன்றும் தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. தற்போது ஆபரணத் தங்கம் ஒரு பவுன் 34 ஆயிரத்திற்கு விற்கப்படுகிறது.
- உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளின் பக்கம் திரும்புகிறார்கள். ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள்,பங்குச்சந்தை போன்றவற்றில் முதலீடு செய்திருந்த முதலீட்டாளர்கள் அனைவரும் தற்போது தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கி உள்ளார்கள்.
- இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, அதன் விலையும் உயர்ந்து வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தற்போது தொழில்துறை தேக்கம் பற்றி பீதி நிலவி வருகிறது இந்நிலையில் தங்கத்தின் விலை சற்று ஏற்ற இறக்கதத்துடன் காணப்படுகிறது.
- ஏற்கனவே 2021-22ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் தங்கம், வெள்ளிப் பொருட்களின் மீதான வரி குறைக்கப்பட்டு இருந்தது.
- கடந்த சில வாரங்களாகத் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வந்தது. இந்தநிலையில் தங்கத்தின் விலை இன்று சற்று அதிகரித்துள்ளது .
- ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ரூ.1 உயர்ந்து ரூ.4240-க்கு விற்கப்படுகிறது.
- மேலும் இன்று 8 கிராம் தங்கத்தின் விலை ரூ.8 உயர்ந்து ரூ.34000-க்கு விற்பனை செய்யப்படுகிறது .
- இதேபோல் இன்று 24 காரட் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.37128-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- 1 கிராம் வெள்ளி 30 காசுகள் குறைந்து ரூ.71.80க்கு விற்பனையாகிறது. அதேபோல இன்று 1 கிலோ வெள்ளியின் விலை ரூ.71,800 ஆக இருக்கிறது.
gpkumar
இவர் பிரவீன் குமார் கணேசன் (Praveen Kumar Ganesan) என்பவராவார். இவர் Inavit Studio மற்றும் Bestpriceinindia.com ஆகிய இணையதளங்களின் நிறுவனரும், தொழில்நுட்ப ஆய்வாளருமாவார். இவர் தனது GPKUMAR என்ற பெயரால் அறியப்படுகிறார். இவர் தொழில்நுட்ப பகுப்பாய்வு மற்றும் டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ளார். நிஜ உலக செயல்திறன் அடிப்படையில் ஸ்மார்ட்போன்கள், இயர்பட்கள் போன்ற கேஜெட்களை மதிப்பீடு செய்வதில் இவர் கவனம் செலுத்துகிறார்

