குறள் 1

அதிகாரம்:

1. கடவுள் வாழ்த்து, குறள் எண்: 1, பால்: அறத்துப்பால்

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

பொருள்:

எழுத்துக்கள் எல்லாம் அகரமாகிய எழுத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. அவ்வண்ணமே உலகம் ஆதியாகிய கடவுளை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது.

பதவுரை:

அகர – ‘அ’ என்னும் எழுத்தில் தொடங்கும் அகர வரிசை; முதல – முதலாகயுடையன; எழுத்து – எழுதப்படுவது; எல்லாம் – அனைத்தும்; ஆதி – முதல், மூலம், பழமை, முற்பட்டுள்ள; பகவன் – கடவுள்; முதற்றே – முதலேயுடையது; உலகு – உலகம்.குறள் 2

அதிகாரம்:

1. கடவுள் வாழ்த்து, குறள் எண்: 10, பால்: அறத்துப்பால்

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்

பொருள்:

இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது.

பதவுரை:

பிறவி – பிறப்பு, இங்கு வாழ்க்கை என்ற பொருளில் ஆளப்பட்டது; பெரும் – பெரியதாகிய; கடல் – கடல்; நீந்துவர் – நீந்துவார்கள்; நீந்தார் – நீந்தமாட்டார். இங்கு கடக்க மாட்டாதவர் என்ற பொருள் தரும்; இறைவன் அடி சேராதார் – கடவுள் தாள் சென்றடையாதார், இங்கு கடவுளை இடைவிடாது நினையாதவர் எனப் பொருள்படும்.

குறள் 3

அதிகாரம்:

2. வான் சிறப்பு, குறள் எண்: 20, பால்: அறத்துப்பால்

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு

பொருள்:

எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும்.

பதவுரை:

நீர் – நீர்; இன்று – இன்றி, இல்லாமல்; அமையாது – நிலைபெறாது, முடியாது; உலகு – உலகம்; எனின் – என்றால்; யார்யார்க்கும் – எவருக்குமே, எவ்வகைப்பட்டவர்க்கும்; வான் – வானம், மழை; இன்று – இல்லாமல்; அமையாது – இருக்காது; ஒழுக்கு – ஒழுக்கம்.

குறள் 4

அதிகாரம்:

5. இல்வாழ்க்கை, குறள் எண்: 45, பால்: அறத்துப்பால்

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது

பொருள்:

இல்வாழ்க்கையின் அன்பும் அறமும் உடையதாக விளங்குமானால், அந்த வாழக்கையின் பண்பும் பயனும் அதுவே ஆகும்.

பதவுரை:

அன்பும் – அன்பும்; அறனும் – நல்வினையும்; உடைத்தாயின் – உடையதானால்; இல்வாழ்க்கை – இல்லாளோடு கூடிய வாழ்க்கை; பண்பும் – குணமும்; பயனும் – பயனும்; அது – அது.

குறள் 5

அதிகாரம்:

5. இல்வாழ்க்கை, குறள் எண்: 50, பால்: அறத்துப்பால்

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்

பொருள்:

உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன், வானுலகத்தில் உள்ள தெய்வ முறையில் வைத்து மதிக்கப்படுவான்.

பதவுரை:

வையத்துள் – நிலவுலகத்துள்; வாழ்வாங்கு – வாழும் முறைப்படி; வாழ்பவன் – வாழ்க்கை நடத்துபவன்; வான் – விண்ணுலகம்; உறையும் – தங்கும்; தெய்வத்துள் – தெய்வத் தன்மையில்; வைக்கப்படும் – மதிக்கப்படும்.

குறள் 6

அதிகாரம்:

7. மக்கட்பேறு, குறள் எண்: 66, பால்: அறத்துப்பால்

குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்

பொருள்:

தம் மக்களின் மழலைச் சொல்லைக் கேட்டு அதன் இனிமையை நுகராதவரே குழலின் இசை இனியது யாழின் இசை இனியது என்று கூறுவர்.

பதவுரை:

குழல் – புல்லாங்குழல்; இனிது – இனிமையானது; யாழ் – யாழ் என்னும் இசைக்கருவி; இனிது – இனிமையானது என்ப – என்று சொல்லுவர். தம் – தமது; மக்கள் – புதல்வர்; மழலை – குதலை; சொல் – மொழி; கேளாதவர் – கேட்காதவர்.

குறள் 7

அதிகாரம்:

8. அன்புடைமை, குறள் எண்: 71, பால்: அறத்துப்பால்

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்

பொருள்:

அன்புக்கும் அடைத்து வைக்கும் தாழ் உண்டோ? அன்புடையவரின் சிறு கண்ணீரே ( உள்ளே இருக்கும் அன்பைப் ) பலரும் அறிய வெளிப்படுத்திவிடும்.

பதவுரை:

அன்பிற்கும் – உள்ள நெகிழ்ச்சிக்கும்; உண்டோ – உளதோ; அடைக்கும் – அடைத்து வைக்கும்; தாழ் – தாழ்ப்பாள்; ஆர்வலர் – முதிர்ந்த அன்புடையவர்; புன் – துன்பம்; கணீர் – கண்+நீர், கண்(ணில் பெருகும்) நீர்; பூசல் – ஆரவாரம்; தரும் – கொடுக்கும்

குறள் 8

அதிகாரம்:

11. செய்ந்நன்றியறிதல், குறள் எண்: 108, பால்: அறத்துப்பால்

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று

பொருள்:

ஒருவரர்முன்செய்த நன்மையை மறப்பது அறம் அன்று; அவர் செய்த தீமையைச் செய்த அப்‌பொழுதே மறந்து விடுவது அறம் ஆகும்.

பதவுரை:

நன்றி – உதவி; மறப்பது – மறத்தல்; நன்று – நன்மை; அன்று – இல்லை நன்று – நன்மை; அல்லதுஅல்லாதது; அன்றே -அக்கணமே; மறப்பது – மறத்தல்; நன்று – நன்மை.

குறள் 9

அதிகாரம்:

13. அடக்கமுடைமை, குறள் எண்: 129, பால்: அறத்துப்பால்

தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு

பொருள்:

தீயினால் சுட்ட புண் புறத்தே வடு இருந்தாலும் உள்ளே ஆறிவிடும்; ஆனால் நாவினால் தீய சொல் கூறிச் சுடும் வடு என்றும் ஆறாது.

பதவுரை:

தீயினால் – நெருப்பால்; சுட்ட – சுட்ட (முதல் அடியில் உள்ள ‘சுட்ட’ நெருப்பினால் சுட்டதைக் குறிக்கும்); புண் – வடு; உள்-உள்ளுக்குள். ஆறும் – தீரும்; ஆறாதே – ஆறமாட்டாதே (மனக்கொதிப்பு ஆறாததைக் குறிக்கும்); நாவினால் – நாக்கினால்; சுட்ட – எரித்த (ஈற்றடியில் உள்ள ‘சுட்ட’ வெம்மையான மொழியால் சுட்டதைக் குறிக்கிறது); வடு – தழும்பு.

குறள் 10

அதிகாரம்:

16. பொறையுடைமை, குறள் எண்: 151, பால்: அறத்துப்பால்

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை

பொருள்:

தன்னை வெட்டுவோரையும் விழாமல் தாங்குகின்ற நிலம் போல், தம்மை இகழ்வாரையும் பொறுப்பதே தலையான பண்பாகும்.

பதவுரை:

அகழ்வாரை – தோண்டுவாரை; தாங்கும் – சுமக்கும்; நிலம் – நிலம்; போல – ஒக்க; தம்மை – தம்மை; இகழ்வார் – இகழ்பவர்கள்; பொறுத்தல் – பொறுத்துக் கொள்ளுதல்; தலை – முதன்மை, சிறப்பு.

குறள்11

அகன்அமர்ந்து ஈதலின் நன்றே ணிகன்அமர்ந்து

இன்சொலன் ஆகப் பெறின்.

விளக்கம்:

ணிகமலர்ச்சியோடு இனிதாகச் சொல்லும் இயல்பும் பெற்றவனானால், அது அவன் மனமகிழ்ச்சியோடு கொடுக்கும் பொருளை விட நல்லதாகும்.

குறள்  12

முகத்தான் அமர்ந்து இனிது நோக்கி அகத்தானாம்

இன்சொ லினதே அறம்.

விளக்கம்:

முகத்தோற்றத்தால் விருப்பத்தோடு இனிமையாகப் பார்த்து, உள்ளத்திலிருந்து வரும் இனிய சொற்களையும் சொல்லும் அதுவே, அறமாகும்.

குறள் 13

இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.

பொருள்:

அன்பு கலந்து வஞ்சம் அற்றவைகளாகிய சொற்கள், மெய்ப்பொருள் கண்டவர்களின் வாய்ச்சொற்கள் இன்சொற்களாகும்.

குறள் 14

அகன்அமர்ந் தீதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்.

பொருள்:

முகம் மலர்ந்து இன்சொல் உடையவனாக இருக்கப்பெற்றால், மனம் மகிழ்ந்து பொருள் கொடுக்கும் ஈகையைவிட நல்லதாகும்.

குறள் 15

முகத்தான் அமர்ந்தின்து நோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம்.

பொருள்:

முகத்தால் விரும்பி- இனிமையுடன் நோக்கி- உள்ளம் கலந்து இன்சொற்களைக் கூறும் தன்மையில் உள்ளதே அறமாகும்.

குறள் 16

துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.

பொருள்:

யாரிடத்திலும் இன்புறத்தக்க இன்சொல் வழங்குவோர்க்குத் துன்பத்தை மிகுதிபடுத்தும் வறுமை என்பது இல்லையாகும்

குறள் 17

பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற.

பொருள்:

வணக்கம் உடையவனாகவும் இன்சொல் வழங்குவோனாகவும் ஆதலே ஒருவனுக்கு அணிகலனாகும் மற்றவை அணிகள் அல்ல.

குறள் 18

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்.

பொருள்:

பிறர்க்கு நன்மையானவற்றை நாடி இனிமை உடையச் சொற்களைச் சொல்லின், பாவங்கள் தேய்ந்து குறைய அறம் வளர்ந்து பெருகும்.

குறள் 19

நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்.

பொருள்:

பிறர்க்கு நன்மையான பயனைத் தந்து நல்ல பண்பிலிருந்து நீங்காத சொற்கள்,வழங்குவோனுக்கும் இன்பம் தந்து நன்மை பயக்கும்

குறள் 20

சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்.

பொருள்:

பிறர்க்குத் துன்பம் விளைக்கும் சிறுமையிலிருந்து நீங்கிய இனிய சொற்கள் மறுமைக்கும் இம்மைக்கும் வழங்குவோனுக்கு இன்பம் தரும் .