பல்லாண்டு காலமாக யோகாசனம் பற்றி அறியாமலேயே, யோகாசனம் செய்வதால் கிடைக்கும் அத்தனை நன்மைகளையும் அனுபவித்தவர்கள் நாம்.

அது எப்படிசாத்தியம்?

ஒன்றை பற்றி அறியாமலே அதன் பலனை எப்படி அடைய முடியும்?

நம் முன்னோர்கள் காலம் காலமாக நமது வழிபாட்டு முறைகளுடன் வாழ்வியல் முறைகளையும் கலந்து தந்திருப்பதுதான் .

தோப்புக்கரணம் என்பது தண்டனை ஆயிற்றே, அது எப்படி பயிற்சி ஆகும்?

தோப்புக்கரணம் பற்றி புராணம், (ம ) அறிவியல் உண்மைகளையும் பார்ப்போம்.

விநாயகப் பெருமானிடம் தோப்புக்கரணம் போடுவதை நாம் பார்த்திருப்போம்… அதன் பலனை பற்றி யாரும் அதை அறிவது இல்லை..

தோப்புக்கரணம் பலன்கள் :

  • நம் கையினால் நாம் நமது காது பிடிப்பதால் காது மடல்களில் உள்ள எல்லாம் உறுப்புகளை இணைக்கின்ற புள்ளிகள் இருக்கிறது..
  • எல்லாம் உறுப்புகளும் செயல்படுவதற்கான ஒரு தூண்டுதல் கிடைக்கின்றது.
  • உட்கார்ந்து எழும் பொழுது காலில் உள்ள சோலியஸ் தசை இயங்குகிறது
  • சோலியஸ் தசைனால் உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராகும்.
  • மூளையில் உள்ள நரம்பு கலங்கள் சக்தி பெறுகிறது.
  • இவ்வாறு தோப்புக்கரணம் போடுவதை ஏற்று பலன்கள் நம் மன அளவிலும் உடல் அளவிலும் மாற்றங்களைக் கொண்டுவரும்..

மருத்துவப் பயன்கள் (Medicinal uses) தூண்டல்

தோப்புக்கரணம் போடும்போது நமது காது மடல்களைப் பிடித்துக்கொள்கிறோம். அப்போதுதான் உடலின் எல்லா உறுப்புகளும் செயல்படுவதற்கானத் தூண்டுதல் கிடைக்கும்.

சீரான ரத்த ஓட்டம் (Balanced blood flow )

உட்கார்ந்து எழும்போது, காலில் இருக்கக்கூடிய சோலியஸ் என்னும் தசை இயங்க ஆரம்பிக்கிறது. இதனால் உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராகும்.

காதுகளில்தான் இதயம், சிறுநீரகம், மூளை, வயிறு, கண்கள், கீழ் மற்றும் மேல் தாடை, ஈரல், காதின் நரம்பு எனப் பல்வேறு உறுப்புகளின் தொடர்புப் புள்ளிகள் அமைந்துள்ளன. எனவே தோப்புக்கரணம் போடும்போது, இந்த எல்லா உறுப்புகளுமே பயன்பெறுகின்றன.

நினைவுத்திறன் (Memory)

இதன்மூலம் மூளையின் நியூரான் செல்கள் புத்துணர்ச்சி அடைகின்றன.
எனவே மூளை சுறுசுறுப்பு அடைந்து நினைவுத்திறன் பன்மடங்கு அதிகரிக்கிறது.

மன அழுத்தம் (mental stress)

தோப்புக்கரணத்தைத் தொடர்ந்து போடும்போது, மன இறுக்கம், மன அழுத்தம் சம்பந்தப்பட்ட நோய்கள் குறைகின்றன.

எலும்பு (Bone)

இப்பயிற்சியால் இடுப்பில் உள்ள எலும்பு, தசை, ஜவ்வு உள்ளிட்டவை வலுவடைகின்றன. இதனால் இடுப்பு வலி வராமல் தடுக்க முடியும்.

பிரசவம் எளிதாக (Easy delivery)

கர்ப்பிணிகள் ஒரு நாளைக்கு 5 முதல் 6 தோப்புக்கரணம் போடுவதன் மூலம் பிரசவம் எளிதாகும். கர்ப்பப்பையின் சுருங்கி விரியும் தன்மை அதிகரித்து, சுகப்பிரசவத்திற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.

தொப்பை குறைய (Lower the belly)

குடல் பகுதிக்குத் தேவையான இயக்கம் கிடைப்பதால், மனிதனால் கழிவை எளிதில் வெளியேற்றிட முடியும். அதே சமயம் தோப்புக்கரணத்தைத் தொடர்ந்து செய்து வந்தால், தொப்பையும் குறையும்.

ஆக இதன் மூலம் தோற்றதன் அடையாளமாகப் போடப்பட்டத் தோப்புக்கரணத்தைக் கொண்டு, வெற்றிகரமான, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும்

இன்றைய பரபரப்பான உலகில் பல பிரச்சினைகள் இருக்கின்ற போதிலும் நாம் தினமும் 5 நிமிடம் தோப்புக்கரணம் போடுவதால் மனம் மற்றும் உடல் நலன்கள் பெறுகின்றன.

நாளும் நன்மைகள் பல பெறுவோம்…..