தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் வருகின்ற 19ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை காரணமாக டிஎன்பிஎல் ஐந்தாவது தொடர் இந்தாண்டு நடக்குமா என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில் கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றி இந்த தொடரை நடத்த அனுமதி அளிக்குமாறு மாநில அரசுக்கு தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் கடிதம் அனுப்பியிருந்தது. அதன் அடிப்படையில் தொடரை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்திருக்கிறது. மொத்தம் மூன்று கட்டங்களாக போட்டியை நடத்த கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.

முதற்கட்டமாக ஜூலை 19 முதல் 29 வரை முதற்கட்ட போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற விருக்கிறது. இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட மைதானங்களுக்கான தேர்வு நடைபெற்று வருகிறது. இறுதி போட்டி ஆகஸ்ட் 15ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டிகளை காண ரசிகர்களுக்கு அனுமதிக்கப்படாது. போட்டியில் கலந்துகொள்ளும் வீரர்களுக்கு ஆர்டிபிசிஆர் டெஸ்ட் மற்றும் ஐந்து நாட்கள் தனிமைப்படுத்துதல் கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

See also  தேவையற்ற டெலிமார்க்கெட்டிங் அழைப்பு மற்றும் நிதி மோசடிகளை கட்டுப்படுத்த மொபைல் ஆப் உருவாக்கும் அரசு