• இந்தியாவில் கொரோனாவின் கொடூரம் சமீப காலமாக கொரோனா தொற்று குறைந்து வந்தது ஆனால் தற்போது கடந்த சில நாட்களாக புதிதாக தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.covai 19 1
  • கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 24,882 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,13,33,728 ஆக உயர்ந்துள்ளது .
  • அதேபோல், தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 140 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,58,446 ஆக உயர்ந்துள்ளது.
  • கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 19,957 பேர் குணமடைந்து விடுதிரும்பினார் , கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,09,73,260 ஆக உயர்ந்துள்ளது.
  • மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 2,02,022 பேர்மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 2,82,18,457 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
  • இந்தியாவில் இதுவரை 225839273 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன என்றும், அதில் நேற்று ஒருநாளில் மட்டும் 8,40,635 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது