Dark Mode Light Mode

இன்று ஒரே நாளில் 24,882 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

  • இந்தியாவில் கொரோனாவின் கொடூரம் சமீப காலமாக கொரோனா தொற்று குறைந்து வந்தது ஆனால் தற்போது கடந்த சில நாட்களாக புதிதாக தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
  • கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 24,882 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,13,33,728 ஆக உயர்ந்துள்ளது .
  • அதேபோல், தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 140 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,58,446 ஆக உயர்ந்துள்ளது.
  • கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 19,957 பேர் குணமடைந்து விடுதிரும்பினார் , கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,09,73,260 ஆக உயர்ந்துள்ளது.
  • மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 2,02,022 பேர்மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 2,82,18,457 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
  • இந்தியாவில் இதுவரை 225839273 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன என்றும், அதில் நேற்று ஒருநாளில் மட்டும் 8,40,635 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது
Previous Post

டெடி மூவி டெடி பியர் ரைம் வீடியோ பாடல்

Next Post

விக்ரம் 60 படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளார்

Advertisement
Exit mobile version