• கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவில் கொரோனா பரவத்தொடங்கியது. தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை விச தொடங்கி உள்ளது.
  • இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 62,258 பேருக்குப் புதிதாக கொரோனா நோய்தொற்று ஏற்பட்டுள்ளது.
  • இதனால் தற்போது நாடு முழுவதும் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1.19 கோடியாக அதிகரித்துள்ளது.
  • மேலும் நாடு முழுவதும் இன்று ஒரே நாளில் 290 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளார்கள்.
  • இதன் மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,61,240 ஆக உயர்ந்து இருக்கிறது.
  • இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் 4.52 லட்சத்திற்கும் மேல் நாடு முழுவதிலும் கொரோனாவால் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
  • கொரோனா பாதிப்பு மாநிலங்ள் அளவில் மகாராஷ்டிராவில்தான் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் நாளை முதல் மகாராஷ்டிராவில் இரவில் மட்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளதாக அம்மாநில அரசு அறிவித்து இருக்கிறது.
  • கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவின் மொத்த கொரோனா பாதிப்பில் 60% மக்கள் மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
See also  வங்கியை விட அதிக வட்டி தரும் போஸ்ட் ஆபீஸ்