ஹைலைட்ஸ்:

  • கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆக்சிஜன் தேவை அதிகரித்து உள்ளது.
  • தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் நேற்று இரவிலிருந்து ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கியது.
  • தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் தயாரிக்கப்பட்ட ஆக்சிஜனை, விநியோகிக்கும் பணி இன்று காலை தொடங்கியது.

கொரோனா இரண்டாவது அலை மக்களை அச்சுறுத்தும் வகையில், உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆக்சிஜன் தேவையும் அதிகரித்து உள்ளது. பல இடங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையினால் உயிரிழப்புகள் அதிகமாகி வருகிறது.

ஆக்சிஜன் பற்றாக்குறையை தடுக்க, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி இருந்தது. இதைத் தொடர்ந்து தமிழக அரசும் அனுமதி வழங்கியது. இந்த ஆலையில் ஆக்சிஜன் தான் தயாரிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த கண்காணிப்பு குழுவினர் ஆலையை ஆய்வு செய்து, பிறகு ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள். தொடர்ந்து இரவு, பகலாக ஆக்சிஜன் உற்பத்தி ஆலையத்தில் பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆக்சிஜன் உற்பத்தி பணிகள் முடிக்கப்பட்டு சோதனை ஓட்டமும் நடந்தபட்டது.

இங்கு தயாரிக்கப்படும் ஆக்சிஜனை வெளியில் கொண்டு செல்வதற்கு வசதியாக கண்டெய்னர் லாரிகளும் கொண்டு வரப்பட்டது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் நேற்று இரவிலிருந்து ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கியது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் தயாரிக்கப்பட்ட ஆக்சிஜனை, விநியோகிக்கும் பணி இன்று காலை தொடங்கியது. ஸ்டெர்லைட் ஆலையில் தயாரிக்கப்பட்ட ஆக்சிஜனை கண்டெய்னர் லாரியில் நிரப்பி ,போலீஸ் பாதுகாப்புடன் வெளியில் கொண்டு சென்றார்கள். ஆக்சிஜன் விநியோகத்தை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்யும், கண்காணிப்புக் குழுத் தலைவரும் தொடங்கி வைத்தார்கள்.

See also  திமுக-காங்கிரஸ் கூட்டணியை பிரதமர் குற்றம் சாட்டினார்