மேஷம் ராசிபலன் (Sunday, March 28, 2021)

உங்கள் அணுகுமுறையில் கவனமாக இருக்கவேண்டும்.நீங்கள் பேசும் போது கவனமாகப் பேசவும். முக்கியமான முடிவுகளை இன்று எடுக்கவேண்டாம். இன்று பணிச்சுமை அதிகமாக இருக்கும். இன்று அதிக செலவுகள் காணப்படும்.சளி சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தோன்றும் சிறிது மிளகை சாப்பிட்டு இன்றைய நாளை தொடங்கவேண்டும். குளிர்ச்சியான உணவுகளை தவிர்க்க வேண்டும். உடல் நலத்தில் ஆரோக்கியம் காட்டுவது நல்லது.குடும்பத்தில் நிம்பதி உண்டாகும்.

ரிஷபம் ராசிபலன் (Sunday, March 28, 2021)

வாக்குவாதம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க செயல்பட வேண்டும். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை தேவை. சிறிய விஷயங்களுக்கு பெரிதாக யோசிக்க வேண்டாம்.இல்லையென்றால் உங்கள் துணைவியுடன் கருத்து வேறுபாடு காணப்படும். தேவையற்ற செலவுகளை குறைப்பது நல்லது.முதுகுவலி ஏற்பட வாய்ப்புள்ளது உரிய சிகிச்சை மேற்கொள்ளுங்கள். இன்று நீங்கள் கவனமாக இருக்கும் நாளாக உங்களுக்கு அமையும்.

மிதுனம் ராசிபலன் (Sunday, March 28, 2021)

இன்று மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். கவனமாக செயலாற்றுவீர்கள். உங்கள் நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். இன்று தொட்டதெனலாம் துலங்கும் நாளாக உங்களுக்கு அமையும். குடும்பத்தில் நிம்பதி உண்டாகும். இன்று பண வரவு அதிகமாக காணப்படும். பணத்தை சேமிப்பீர்கள்.ஷேர் மார்கெடில் முதலீடு செய்வீர்கள். இன்று உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும்.இன்று மகிழ்ச்சி தரும் நாளாக உங்களுக்கு அமையும்.

கடகம் ராசிபலன் (Sunday, March 28, 2021)

இன்று காணப்படும் பதட்டத்தை குறைத்துக்கொள்ள வேண்டும். மன நிலை சாந்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். பணிச்சுமை சிறிது கடினமாக காணப்படும். சகபணியாளர்களிடம் சற்று ஒதுங்கி இருப்பது நல்லது. இது உங்களுக்கு வருத்தத்தை அளிக்கும். உங்கள் துணைவிடன் சகஜமாகப் பழக வேண்டும். தேவையற்ற செலவுகளை சந்திப்பீர்கள் .இன்று இருமல் போன்ற தொண்டை சம்பதப்பட்ட பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது. எங்கும் எதிலும் கவனம் தேவைப்படும் நாளாக உங்களுக்கு அமையும்.

See also  ஐந்து சதவீத விமான கட்டணம் உயர்வு

சிம்மம் ராசிபலன் (Sunday, March 28, 2021)

இன்று வாக்குவாதங்கள் குறைத்து கொள்வது நல்லது. இது உங்களுக்கு கவலையை அளிக்கும் நாளாக அமையும். இன்று அமைதியாக இருப்பது சிறந்தது. பணிச்சுமை இன்று கடினமாக காணப்படும். உங்கள் பணிகளை திட்டமிட்டு செயல்பட வேண்டும். இன்று பொறுமையாக இருக்க வேண்டும். முடிந்த அளவு சேமிக்க வேண்டும். தேவையற்ற செலவுகள் குறைத்து கொள்ளவேண்டும். தலைவலி வர வாய்ப்பு உள்ளது. இன்று எதிலும் கவனம் தேவைப்படும் நாளாக உங்களுக்கு அமையும்.

கன்னி ராசிபலன் (Sunday, March 28, 2021)

இன்று மகிழ்ச்சியான நாளாக இல்லாவிட்டாலும் பொறுமையும் நன்மையும் தரும். எதையோ இழந்தது போன்ற உணர்வுகள் மனதில் ஏற்படும். தியானம், யோகா மேற்கொள்வதன் மூலம் ஆறுதலாக இருக்கும். பணிகளை மேற்கொள்ளும் போது சில தடைகளை எதிர் கொள்வீர்கள். இன்று பண வரவு குறைந்து காணப்படும். தேவையற்ற குழப்பங்களை தடுப்பது உங்கள் ஆரோக்கியத்திர்க்கு நல்லது. இன்று உங்களுக்கு பொறுமையும் நன்மையும் தரும் நாளாக அமையும்.

துலாம் ராசிபலன் (Sunday, March 28, 2021)

இன்று சிறப்பான நாளாக உங்களுக்கு அமையும். உங்கள் சுய முயற்சின் காரணமாக வளர்வீர்கள். உங்களின் உறுதியினால் வெற்றி பெறுவீர்கள். பணி வளர்ச்சில் சிறப்பாக காணப்படுவீர்கள். உங்கள் பணிகளை திறமையாக செயல்படுத்துவீர்கள். இன்று வருமானத்தில் லாபம் காணப்படும். சேமிப்பு உயர்வாக இருக்கும். நம்பிக்கை உணர்வு காரணமாக இன்று ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

விருச்சிகம் ராசிபலன் (Sunday, March 28, 2021)

இன்றைய நாள் சமநிலை உணர்வோடு இருக்கும். உங்கள் பெற்றோரின் ஆதரவை பெறுவீர்கள். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். இன்று திருப்திக்காரமான நாளாக இருக்கும்.உங்கள் நேர்மையினால் மேல் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். உங்கள் பணிகளை எளிதில் முடிப்பீர்கள். உங்களுக்குள் இருக்கும் திறமைகளை வெளிக்கொணர்வீர்கள், இதனால் உங்கள் மீதான மதிப்பு உயரும். உங்கள் ஆரோக்கியம் இன்று சிறப்பாக காணப்படும். இன்று உங்களுக்கு மகிழ்ச்சிகரமாக நாளாக அமையும்.

தனுசு ராசிபலன் (Sunday, March 28, 2021)

ஆன்மீக சொற்பொழி, இறைவன் வழிபாட்டில் ஈடுபடுவதன் மூலம் இன்று ஆறுதல் கிடைக்கும். உங்கள் பேச்சில் கவனமாக இருக்க வேண்டும். இன்று நண்பர்களை சந்திப்பதை தவிர்க்கவும். அதிகப் பணிச்சுமை காணப்படும் பயணத்தில் பண இழப்பிற்கான வாய்ப்புகள் உண்டு. பணத்தில் கவனம் தேவை.

மகரம் ராசிபலன் (Sunday, March 28, 2021)

இன்று எளிய பணிகளைச் செய்வது கூட கடினமாக இருக்கும். உங்கள் சக்தியை இழந்து காணப்படுவீர்கள். இதன் விளைவாக பாதிப்பு ஏற்படும். அமைதியை மேற்கொள்ளவேண்டும். உங்கள் பணியில் கவனம் தேவை. உங்கள் பணிகளை கவனமாக கையாள வேண்டும். உங்களின் கவனக்குறைவால் இன்று நீங்கள் பணம் இழக்க நேரலாம். தொண்டையில் வலி எற்ப்படும். குளிர்ச்சியான உணவுகளை தவிர்ப்பது நல்லது.

See also  ஏடிஎம்யில் மூன்று முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் எவ்வளவு தெரியுமா?

கும்பம் ராசிபலன் (Sunday, March 28, 2021)

இன்று அனுகூலமான நாளாக இருக்கும். இன்று சமநிலை உணர்வோடு காணப்படுவீர்கள். இன்று புதிய நண்பர்களை ஏற்படுத்திக் கொள்வீர்கள். பிறருடன் கலந்து பேசி மகிழ்வீர்கள். கடினமான பணிகளைக் கூட எளிதாகச் செய்வீர்கள் பணியாளர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். பணத்தை பயனுள்ளதாக செலவு செய்வீர்கள்.உங்களின் தன்னம்பிக்கை காரணமாக உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மீனம் ராசிபலன் (Sunday, March 28, 2021)

இன்று அதிர்ஷ்டகரமான நாள். நீங்கள் மிகுந்த முயற்சி செய்து அதில் வெற்றியும் காண்பீர்கள். உங்கள் புத்திசாலித்தனத்தினால் இன்றைய நாளை சிறப்பாக காணப்படும். உங்கள் புத்திகூர்மையால் இன்றைய பணிகளை எளிதாக்குவீர்கள். வெற்றி பெற வேண்டும் என்று உங்கள் மனநிலை உங்களின் பணியில் பிரதிபலிக்கும். உங்களின் மன உறுதியால் இன்று அதிக ஆற்றலுடன் காணப்படுவீர்கள்.