மேஷம்:

  • மேஷ ராசியினர் தங்கள் முதலீடு திட்டங்கள் குறித்து சில முடிவுகளை எடுப்பீர்கள்.
  • உங்கள் பொறுப்புகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்களின் செயல்பாடு சிறப்பாக இருக்கும்.
  • உங்களின் எதிரிகளை சிறப்பாக கையாளுவீர்கள்.
  • தேவையில்லாமல் பொது இடங்களுக்குச் செல்ல வேண்டாம்.
  • அலைச்சலான செயலில் ஈடுபட வேண்டாம்.
  • கையில் எடுத்த எந்த வேலையும் வெற்றி தரும்.

ரிஷபம்:

  • இன்று ரிஷப ராசிக்கு சில நல்ல லபாம் தரக்கூடிய விஷயங்கள் நடக்கும்.
  • வியாபாரத்தில் புதிய கூட்டாளி சேர வாய்ப்புள்ளது.
  • பணம் சார்ந்த விஷயங்களில் மன அழுத்தம் குறையும்.
  • நண்பர்கள், உறவினர்களிடம் இன்ப சுற்றுலா, பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது.
  • உங்களுக்கு பிடித்தவருடன் மகிழ்ச்சிகரமான நேரத்தை செலவிடுவீர்கள்.

மிதுனம்:

  • மிதுன ராசியினருக்கு கலவையான பலன்கள் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும்.
  • வண்டி, வாகனம், சொத்துக்கள் வாங்குவதற்கான முயற்சிகள் சாதகமாக அமையும்.
  • இருப்பினும் அது தொடர்பான விஷயங்களில் தகுந்த ஆலோசனை தேவை.
  • பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த மிகுந்த கவலை ஏற்பட வாய்ப்புள்ளது. அலைச்சல் அதிகம் ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளது.
  • மகிழ்ச்சி அதிகரிக்கக்கூடிய நாளாக இருக்கும்.

கடகம்:

  • கடகம் ராசியினருக்கு குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும்.
  • வாழ்வில் அனைத்து துறைகளிலும் வெற்றி தரக்கூடியதாகவும், முன்னேற்றப்பாதையில் செல்லக்கூடிய வாய்ப்புள்ளது.
  • வியாபாரிகள் சட்ட விரோத செயல்களிலிருந்து தள்ளி இருப்பது அவசியம்.
  • உத்தியோகத்தில் சக ஊழியர்களின் முழு ஆதரவும் கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

சிம்மம்:

  • சிம்ம ராசியினருக்கு முடிவெடுப்பதில் தடுமாற்றம் இருக்கும்.
  • வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
  • நீங்கள் செய்த பழைய முதலீடுகளிலிருந்து நல்ல லாபம் பெறலாம்.
  • உங்கள் வாழ்க்கைத் துணையுடன் நெருக்கம் அதிகரிக்கும்.
  • குடும்ப உறுப்பினர்களுடனான அன்பும், ஆதரவும், மகிழ்ச்சியும் உண்டாகும்.

கன்னி:

  • கன்னி ராசிக்கு இன்று சொந்த முயற்சியில் நல்ல முன்னேற்றம் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும்.
  • பண விஷயத்தில் கூடுதல் கவனம் வேண்டும்.
  • மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டிய நாள்.
  • வீட்டில் உள்ள பெரியவர்களின் உடல் நலனில் அக்கறை காட்டுங்கள்.
  • குடும்பத்தின் ஆர்வம் சார்ந்த கவலை ஏற்படும்.
  • குழந்தைகளின் உதவி மகிழ்ச்சி அதிகரிக்கும். இறைவனை தியானிப்பது மன அமைதியைத் தரும்.

துலாம்:

  • உங்களுக்கு எடுக்கு முயற்சியில் சாதக பலன் உண்டாகும்.
  • பண வரவுகள் லாபகரமான பலன் உண்டாகும்.
  • என்றாலும் இன்று வீண் செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.
  • தொழில் ரீதியாக வேலையாட்களையும், கூட்டாளிகளையும் அனுசரித்து செல்வது நல்லது.

வேலைக்கு செல்பவர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்வதால் உங்களின் பிரச்னைகளை எளிதாக கையாள முடியும். சில நேரங்களில் வேலைப்பளு அதிகமாக இருக்கும். இருப்பினும் அதற்கான ஆதாயங்களை அடைவீர்கள்.

விருச்சிகம்:

  • நீங்கள் எதிலும் சற்று நிதானமாக செயல்பட வேண்டும்.
  • தேவையற்ற அலைச்சல் ஏற்படலாம்.
  • எளிதில் முடியக்கூடிய காரியங்கள் கூட சற்று தாமதமாகலாம்.
  • இருப்பதை அனுபவிப்பதற்கு கூட தடை ஏற்படலாம்.
  • வேலைக்கு செல்பவர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்வதால் நன்மை உண்டாகும்.
  • பணிச்சுமை இருக்கும். பேச்சில் சற்று கண்ணியம் தேவை. வண்டி வாகன பயன்பாட்டில் கவனம்.

தனுசு:

  • அன்பர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நல்ல நாள் ஆகும்
  • பொருளாதாரத்தில் சிறிய அளவில் பற்றாக்குறை இருந்து வந்தாலும் திறம்பட சமாளித்து வெற்றி பெறுவீர்கள்
  • சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான காரியங்களில் இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.
  • கல்வியில் மாணவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும்
  • பெண்களுக்கு மிகச் சிறந்த நாளாகும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மன நிம்மதி கிடைக்கும் மேல் அதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும்.
  • தாங்கள் ஈடுபட்டிருக்கின்ற ஒரு வேலையில் இருந்து மற்றொரு வேலைக்கு இடம் மாறுவதற்கான முயற்சிகள் வெற்றியடையும் வெளிநாடுகளில் வசித்து கொண்டிருப்பவர்களுக்கு உத்தியோகம் சிறப்பாக இருக்கும் சொந்தத் தொழில் செய்பவர்கள் மேன்மையடைவார்கள்.

மகரம்:

  • நேயர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும்.
  • திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும்.
  • பொருளாதாரத்தில் நல்ல நிலைமையை அடைவீர்கள்
  •  எதிர்பாராத தனவரவு உண்டாகும் பெண்களுக்கு மிக நல்ல நாள் ஆகும் கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருந்து வரும்.
  • பூர்வீகம் தொடர்பான பிரச்சினைகளில் இருப்பவர்களுக்கு நல்ல முடிவுகள் கிடைக்கும்
  • வெளிநாடு செல்ல வாய்ப்பு பலருக்கு உருவாகும்
  • வெளிநாட்டுப் பயணங்களால் ஆதாயம் கிடைக்கும்
  • வெளிநாடுகளில் வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு விசா தொடர்பான காரியங்களை துவக்குவதற்கு இன்று நல்ல நாள் ஆகும்.

கும்பம்:

  • நண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும்
  • தன வரவு உண்டாகும்
  • திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் சற்று காலதாமதம் ஆனாலும் வெற்றி ஏற்படும்
  • ஒரு சிலருக்கு வெளியூர் மற்றும் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்
  • பயணங்களால் ஆதாயம் உண்டு என்பதால் தைரியமாக பிரயாணத்தை மேற்கொள்ளலாம்.
  • கல்வியில் மாணவர்கள் நல்ல நிலையைப் பெறுவார்கள் உயர்கல்வி கற்று கொண்டிருப்பவர்கள் சிறந்த முன்னேற்றத்தை அடைவார்கள்
  • சொந்த தொழில் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள்
  • உங்கள் கண் முன் வந்து நிற்கும் திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும் தனவரவு உண்டாகும்
  • நீண்ட நாட்களாக தாமதப்படுத்தப்பட்டு வந்த பல காரியங்கள் வெற்றியடையும்.

மீனம்:

  • நீங்கள் சற்று பொறுமையுடன் செயல்பட்டால் யோக பலனைப் பெறலாம்.
  • எடுக்கும் முயற்சியில் சாதகமான பலனை பெறலாம். நவீனகரமான பொருட்களை வாங்குவீர்கள்.
  • கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும்.
  • உறவினர்களுடனான பகைமை விலகி உறவு வலுப்படும்.
  • வேலைக்கு செல்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
  • தொழில் செய்பவர்கள் அனுசரித்துச் செல்வதால் நற்பலன் ஏற்படும்.
  • நிதானமாக செயல்படுவது அவசியம்.
  • நீண்ட நாட்கள் தடைப்பட்டு வந்த சுபகாரியங்கள் நடக்க வாய்ப்புள்ளது.