ஹைலைட்ஸ்:

  • நாளை சேலம், ஈரோடு, கோவை மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
  • முதலமைச்சர் கோவை அரசு கலை, அறிவியல் கல்லூரிக்கு சென்று, அங்குள்ள கொரேனா சிறப்பு சிகிச்சை மையத்தை நாளை திறந்து வைக்கிறார்.
  • நேரு விளையாட்டரங்கத்தில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனையை முதலமைச்சர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம், ஈரோடு, கோவை மாவட்டங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நாளை நேரில்ஆய்வு மேற்கொள்ளவதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் மாவட்ட ஆட்சியர் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோவை அரசு கலை, அறிவியல் கல்லூரி கொரோனா சிறப்பு சிகிச்சை மையமாக மாற்றப்பட்டு உள்ளது. அங்கு கொரோனா பாதிப்பு உள்ளானவர்களுக்காக 250 படுக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

நாளை காலை 11 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலத்தில் இருந்து கார் மூலமாக கோவைக்கு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

மாவட்ட ஆட்சியர் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை முடிந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை அரசு கலை, அறிவியல் கல்லூரிக்கு சென்று, அங்குள்ள கொரேனா சிறப்பு சிகிச்சை மையத்தை திறந்து வைத்து பார்வையிடுகிறார்.

கொரேனா சிறப்பு சிகிச்சை மையத்தை பார்வையிட்ட பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசினர் விருந்தினர் மாளிகைக்கு சென்று மதிய உணவு முடித்த பின் விமானம் மூலமாக சென்னைக்கு புறப்பட்டு செல்வார்.

நேரு விளையாட்டரங்கத்தில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனையை முதலமைச்சர் நேரில் சென்று ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து தனியார் மருத்துவமனைகளுக்கு தேவையான ரெம்டெசிவிர் மருந்துகளை பிரதிநிதிகளிடமும் வழங்கினார்.

 

See also  மக்களுக்கு பயன்தரும் நிதிநிலை அறிக்கை முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல்