உலகில் முதல் பத்து இடத்தை பிடித்துள்ள கோடிஸ்வரர்களின் பட்டியல் வெளியாகி உள்ளது.

  • இந்த ஆண்டு கோடிஸ்வரர்களில் முதலிடத்தில் 177 பில்லியன் அமெரிக்க டாலரை வைத்துள்ள அமேசான் நிறுவர் ஜெப்பெசாஸ் இருக்கிறார்.
  • இவரை தொடர்ந்து 2வது இடத்தில் 151 பில்லியன் டாலர் வைத்துள்ள டெஸ்லாவின் தலைமைச் செயல் அதிகாரி எலான்மஸ்க் இருக்கிறார்.
  • எலான்மஸ்க் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ள கோடீஸ்வரர்களின் பட்டியலில் 31வது இடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
  • மூன்றாவது இடத்தில் LVMH தலைமை செயல் அதிகாரி பெர்னார்ட் அர்னாலட் உள்ளார். இவர் 150 பில்லியன் டாலர் வைத்துள்ளார்.
  • அவரை தொடர்ந்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் உரிமையாளர் பில்கேட்ஸ் நான்காம் இடத்தை பிடித்துள்ளார்.
  • அடுத்ததாக பேஸ்புக் நிறுவர்மார்க் ஜூக்கர்பெர்க் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார்.
  • இவரை தொடர்ந்து ஆறாவது இடத்தில் வாரன் பஃபெட் உள்ளார்.
  • ஏழாவது இடத்தில் லாரி எலிசனும், 8வது இடத்தில் லாரி பேஜ்-யும் , ஒன்பதாவது இடத்தில் சர்ஜிப்ரினனும் உள்ளார்கள்.
  • முகேஷ் அம்பானி பத்தாவது இடத்தை பிடித்துள்ளார்.