கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு 2020 மார்ச் 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் டிரைவிங் லைசென்ஸ், வாகன தகுதிச்சான்று, பர்மிட் போன்ற போக்குவரத்து ஆவணங்கள் செல்லுபடியாகும் காலத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது. அதாவது 2020 ஆம் ஆண்டு மார்ச் முதல் ஆறு முறை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில் ‘2020 பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் 2021 மார்ச் 31 ஆம் தேதி வரை காலாவதியாகும் அனைத்து போக்குவரத்து ஆவணங்களும் 2021 ஜூன் 30 ஆம் தேதி வரை செல்லுபடியாகும் என மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. அனைத்து போக்குவரத்து துறை அலுவலகங்களுக்கும் இது குறித்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

இந்திய முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை பரவி வருகிறது. தமிழகம் உட்பட எட்டு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனா பரவல் அதிகரிப்பதை கட்டுப்படுத்த இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்று மத்திய அமைச்சகம் விளக்கம் அளித்து உள்ளது.

See also  கொரோனா பரவல் காரணமாக பள்ளிகளுக்கு அவசர உத்தரவு