தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித் தொகை திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் உள்ளிட்ட அனைத்து இன இளைஞர்களும் ஆண்டுதோறும் விண்ணப்பிக்கலாம். இதற்கான கல்வித்தகுதி 9-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள், 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள், 12 ஆம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு பயின்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களும் இந்த உதவிதொகைக்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க ஆதிதிராவிடா், பழங்குடியினருக்கு 45 வயது, மற்ற இனத்தவா்களுக்கு 40 வயது பூா்த்தி அடைந்திருக்கக் கூடாது மற்றும் குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் இருக்க கூடாது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ள மனுதாரா்கள் தங்களது அசல் கல்விச் சான்று, மாவட்ட வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு எடுத்து சென்று நேரில் விண்ணப்பிக்க வேண்டும்.

மாற்றுத்திறனாளிகள் தங்கள் கல்வித் தகுதியை பதிவு செய்து 30.06.2021 அன்று ஓராண்டு முடிவடைந்து இருக்க வேண்டும். மேலும் இவர்கள் அசல் கல்விச் சான்றிதழ்கள், தேசிய அடையாள அட்டை, வேலைவாய்ப்பக அடையாள அட்டை ஆகியவற்றை வைத்திருக்க வேண்டும். இவர்களுக்கு வருமான சான்று தேவையில்லை.

ஏற்கனவே கடந்த ஆண்டு விண்ணப்பித்திருந்தால் வங்கி கணக்கு புத்தகம், அசல் கல்விச் சான்றிதழ்கள், வருவாய்த்துறை சான்று ஆகியவற்றை கொண்டு சுயஉறுதிமொழி ஆவணத்தை பூர்த்தி செய்து சமா்ப்பிக்க வேண்டும்.

See also  5 மாநிலங்களின் தேர்தல் அட்டவணையை இறுதி செய்ய தேர்தல் ஆணையம் இன்று கூட்டம் நடத்த உள்ளது.