• வடிவேலு ஹீரோவாக நடித்த படம் ‘23ஆம் புலிகேசி’. இந்த படம் மிக பெரிய வெற்றி அடைந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை ‘24ஆம் புலிகேசி’ என்ற தலைப்பில் உருவாக்க இருப்பதாக தகவல் வெளியானது.
  • லைகா நிறுவனம் இணைந்து பழைய படத்தின் அதே கூட்டணியில் இந்த படத்தை உருவாக்க இருந்தது.இதைத்தொடர்ந்து இந்த படப்பிடிப்பும் தொடங்கப்பட்டது.
  • படப்பிடிப்பு தொடங்கப்பட்ட கொஞ்ச நாட்களிலேயே சில பிரச்சினைகள் காரணமாக இந்த படத்தின் ஷூட்டிங் நிறுத் தி வைக்கப்பட்டது. நீண்ட நாட்களாக இப்படத்தின் பிரச்சினை முடிவுக்கு வராமல் இழுபறித்து கொண்டு இருந்தது.
  • இதனால் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் வடிவேலு மற்ற படங்களில் நடிக்கத் தடை விதித்தது .
  • இதனால் திரைப்பட தயாரிப்பாளர்கள் வடிவேலுவை புதிய படங்களில் ஓப்பந்தம் செய்ய தயக்கம் காட்டினார்கள்.
  • கடந்த சில ஆண்டுகளாக படங்களில் நடிக்காமலிருந்த வடிவேலு, தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
  • இந்நிலையில்,தலைநகரம், மருதமலை, படிக்காதவன், கத்தி சண்டை ஆகிய படங்களை இயக்கிய சுராஜ் இயக்கும் புதிய படத்தில் வடிவேலு ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
  • சுராஜ் இயக்கும் இந்த புதிய படத்திற்கு ‘நாய் சேகர்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
  • சுராஜ் இயக்கத்தில் வெளியான தலைநகரம் படத்தில் வடிவேலு ‘நாய் சேகர்’ கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
  • தற்போது வடிவேலு மீண்டும் நாய் சேகர் வேடத்தில் நடிக்கயுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. நாய் சேகர் வேடத்தில் வடிவேலுவை பார்க்க ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளார்கள்.