விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் வனிதா விஜயகுமார்.

தற்போது ஒரு படத்தில் சமுத்திரகனிக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

குக் வித் கோமாளி சீசன் 1 நிகழ்ச்சியில் பங்கேற்று வனிதா விஜயகுமார் முதல் பட்டம் வென்றார். தற்போது யூடியூப் சேனல், டிவி நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

இதற்கிடையில் சில படங்களில் நடிக்க ஒப்பந்தம் போட்டு உள்ளார்.

ஆதம் தாசன் இயக்கத்தில் அனல் காற்று என்ற படத்தில் அவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் அவருடன் கருணாகரன் முக்கிய கேரக்டரில் நடிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு பிரசாந்த் நடித்து கொண்டு இருக்கும் ‘அந்தகன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வனிதா நடிப்பதாக ஏற்கனவே கூறப்பட்டு இருந்த நிலையில் தற்போது அந்த தகவலை வனிதா சமூகவலைதளத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் பக்கத்தில், ‘அந்தகன்’ பட செட்டில் நானும் இணைந்துள்ளேன். இந்த திரைப்படத்தில் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக நடிக்கிறேன்” என கூறியுள்ளார். அந்தகன் திரைப்படத்தில் படத்தில் சமுத்திரக்கனி போலீசாக நடிக்கிறார்.

அவரது மனைவி வேடத்தில் தான் வனிதா நடிக்க போகிறாராம். பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியான பிளாக்பஸ்டர் திரைப்படம்படம் ‘அந்தாதூன்’. இப்படத்தை தமிழில் ரீமேக் செய்கின்றனர்.

அந்தகன் திரைப்படத்தில் கடந்த 10 நாட்களாக சமுத்திரக்கனி, வனிதா நடிக்கும் காட்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.

Categorized in:

சினிமா,

Last Update: April 9, 2021