Contact Information

Theodore Lowe, Ap #867-859
Sit Rd, Azusa New York

We Are Available 24/ 7. Call Now.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் 3000 ரன்களை கடந்து புதிய மைல்கல்லை எட்டிய முதல் வீரராக விளங்குகிறார்.

தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது.

இந்திய அணி முதல் போட்டியில் தோல்வி அடைந்த நிலையில், அஹமதாபாத்தில் நேற்று இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி நடைபெற்றது.

இந்தப் போட்டியில் இந்திய அணியில் சூர்ய குமார் யாதவ், இஷான் கிஷண் ஆகியோர் புதுமுக வீரர்களாக களமிறங்கினார்கள்.

இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர் ஜேசன் ராய் அதிகபட்சமாக 46 ரன்கள் எடுத்தார்.

மேலும் வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகுர் ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தார்கள்.

தொடக்க வீரர் இஷான் கிஷன், கேப்டன் விராட் கோலி ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் 18 ஆவது ஓவரிலயே 165 ரன்கள் என்ற இலக்கை இந்திய அணி எட்டியது.

அதிரடி விளாசல் காட்டிய இஷான் கிஷன் 32 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 4 சிக்சர்களுடன் 56 ரன்கள் எடுத்தார். மேலும் ரிஷப் பந்த் தம் பங்கிற்கு 13 பந்துகளில் 26 ரன்கள் விளாசினார்.

கேப்டன் விராட் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 49 பந்துகளில் 73 ரன்கள் குவித்து, வெற்றிக் களிப்புடன் பெலிவியன் திரும்பினார்.

இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்று சமநிலையில் உள்ளதால் 5 போட்டிகள் கொண்ட தொடர் விறுவிறுப்படைந்துள்ளது.

86 டி20 போட்டிகளில் விளாடியுள்ள கேப்டன் விராட் கோலி, சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் 3000 ரன்களை கடந்து புதிய மைல்கல்லை எட்டிய முதல் வீரராக விளங்குகிறார்.

விராட் கோலிக்கு அடுத்தபடியாக நியூசிலாந்து அணியின் வீரர் மார்டின் குப்தில் சர்வதேச டி20 போட்டிகளில் 99 போட்டிகளில் 2839 ரன்களுடனும், இந்திய அணி வீரர் ரோகித் சர்மா 109 போட்டிகளில் 2773 ரன்களுடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

ஐபிஎல் டி20 போட்டிகளிலும் அதிக ரன் குவிப்பில் விராட் கோலியே முன்னிலையில் உள்ளார். 192 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 5878 ரன்களை குவித்துள்ளார்.

டெஸ்ட், டி20, ஒருநாள் ஆகிய மூன்று விதமான போட்டிகளிலும் பேட்டிங் சராசரியில் விராட் கோலி 50 ரன்களை கடந்தார்.

 

 

 

 

 

 

 

Share: