Wedding Anniversary HD Wallpapers

 

Wedding Anniversary HD Wallpapers 15   Wedding Anniversary HD Wallpapers 11 Wedding Anniversary HD Wallpapers 10 Wedding Anniversary HD Wallpapers 8 Wedding Anniversary HD Wallpapers 7 Wedding Anniversary HD Wallpapers 4 Wedding Anniversary HD Wallpapers 2 Wedding Anniversary HD Wallpapers 1 Wedding Anniversary HD Wallpapers

 

திருமண நாள் வாழ்த்து கவிதை

வாழ்க்கை என்பதன் பொருளுக்கு அர்த்தம் தெரியும் மிகசிறந்த நன்னாளே உன் இனிய திருமண நாள்

 

 

திருமணமே நம் வாழ்க்கையின் முக்கிய தருணம் என்ற பெரியோரின் கூற்றுப்படி உங்கள் இருவரின் புரிதல் ஒன்றாகி உங்கள் இல்லறம் அழகாக இந்த நல்ல நாளில் மனநிறைவுடன் வாழ்த்துகிறேன்.

 

வானம் போல எங்குமே நீயும் அவளும் நீக்கமற நிறைந்து காதலின் வற்றாத நீரை போல உங்கள் வாழ்வில் புன்னகை என்றுமே நீங்காமல் இருவருக்குள்ளும் ஒற்றுமை தழைத்தோங்கி நீண்ட ஆயுளோடு சகல சௌபாக்கியங்களும் பெற்று வாழ வேண்டி வாழ்த்துகிறேன்.

 

 

இதுவரை இருந்து வந்த சஞ்சலங்களும் மன குழப்பங்கள் அனைத்தும் நீங்கி இன்பம் பொங்க உங்கள் மணநாள் குதூகலமாகவும் என்றுமே உங்கள் வாழ்வில் மறக்க முடியாத பொன்னான நாளாக அமையட்டும் இனிய திருமண வாழ்த்துக்கள்.

 

கடவுளின் கருணையால் இரு உள்ளங்கள் ஒன்று சேர்ந்து இறுதிவரை பிரியாமல் ஒருவருக்கொருவர் விட்டு கொடுக்காமல் பரிவன்போடும் அன்யோன்யமாக வாழ எல்லாம் வல்ல அந்த தெய்வம் உங்களை துணை நின்று நடத்தட்டும்.

 

நீயும் நானும் என்று இன்று வரை வாய் மொழியில் சொல்லி கொண்டிருந்த நாம் இன்று நாம்,நம் என்ற திருமண பந்தத்தில் இணைந்து இணைபிரியாமல் என்றும் உன் கரங்களுடன் என் வாழ்வினை நம் வாழ்வாக மாற்றி இந்நாள் போன்று கடைசி வரை எந்நாளும் நமக்கு பொன்னான நாளாக அமைய அந்த இறைவனை வேண்டுகிறேன்.

 

சுற்றம் சூலமும் வந்து வாழ்த்தி அன்பும் பண்பும் பெருகி கஷ்டம் கவலைகளை எல்லாம் மறந்து உங்கள் எதிர்காலம் என்னும் கனவு எண்ணம் போல சிறக்க வேண்டி உங்கள் திருமண நாளில் நான் மனமார வாழ்த்துகிறேன்

 

குறையின்றி எல்லா வளங்களும் பெற்று செல்வச்செழிப்புகள் மிகுந்து உற்றார் உறவினர்கள் சூழ சீரும் சிறப்புமாய் இல்லற வாழ்க்கை நல்லறத்தோடு அமையட்டும்
 

தினமும் பூத்து மகிழும் பூக்கள் போல என்றுமே புன்சிரிப்போடும் பாசமும் நேசமும் அளவில்லாமல் நிரம்பி  உங்கள் தாம்பத்ய வாழ்க்கை என்றுமே புத்தம் பொலிவுற வாழ்த்துகிறேன்.

 

 

இறைவன் உன்னவனையோ அல்லது உனக்கான அவளையோ என்றோ சொர்க்கத்தில் நிச்சயித்து விட்டான்.

ஆகவே இந்த இறைவனின் கிருபையால் நடைபெறும் இந்த நல்ல நாளில் நீங்கள் இருவரும் வாழ்க பல்லாண்டு.

ஊரே கூடி உறவுகள் எல்லாம் ஒன்றாக இணைந்து தோரணம் வைத்து விழாக்கோலம் பூண்டு மணமக்களை வாழ்த்தும் ஒரு சுபநிகழ்ச்சியே திருமணம்.
 

எங்கோ பிறந்து வாழ்ந்த இரு இதயங்களை இணைந்து ஒன்றாக இருவரின் வாழ்க்கைக்குள் ஒரு புது உதயம் தரும் சிறந்த தினமே திருமண நாள்..

உன் வாழ்வில் ஒளிரூட்டும் வண்ணமிகு இந்த திருமண நாள் உனக்கு கோலாகலாமானதாக அமையட்டும்.

துணையோடு இரு கரங்களை பற்றி வாழ்க்கை பூராவும் புரிதலோடு ஒன்றுபட்டு இனி வரப்போகும் அத்தியாயத்தை அர்த்தமுள்ளதாக மாற்றுங்கள்.

நீ,நான் என்று சொல்லும் காலம் போய் நாம்,நாங்கள் என்று சொல்ல காத்து கிடக்கும் இந்த இரு நல்ல நெஞ்சங்களுக்கு திருமண நாள் வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன்.
 

அனைத்து உறவுகளும் உன் வழியே நிற்கலாம் ஆனால் துணையாக உன் உயிராக கூடவே இருந்து வாழ்க்கைக்கு வழி காட்டும் சிறந்த துணைவியே உன் வாழ்க்கைத்துணைவி.

கண்ணின் மீது படர்ந்த இமை போல என்றுமே இருவரும் நொடிப்பொழுதும் கூட பிரியாமல் குடும்பம் என்ற பந்தத்தினுள் ஒருங்கிணைந்து வாழ்வீர்களாக…
அங்கம் முழுவதும் மகிழ்ச்சி பொங்கலாய் பொங்கிட இருவரின் முகமும் பூக்கள் போல மலர்ந்து என்றுமே இனிமையான தருணங்களில் உங்கள் வாழ்க்கை பயணம் செல்ல நான் மனதார வாழ்த்துகிறேன்
திருமண கோலத்தில் போடும் நல்வரவு போல இனி வரும் காலங்கள் அனைத்திலும் உங்கள் வாழ்க்கையில் நல்லதாகவே அமையட்டும் நற்செயல்கள் நடக்கட்டும் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.
செல்வம் வந்தால் ஆடாமல் வசதி வந்ததை பாடாமல் ஏழ்மை நிலையிலும் நிலை மாறாமல் தன்னம்பிக்கை என்ற ஒன்றை இழக்காமல் வாழ்க்கை பக்கத்தை நீங்கள் இந்த திருமண நாளிலிருந்து ஆரம்பியுங்கள்.
 

இறைவன் வகுத்த இன்னாருக்கு இன்னார் தான் என்று அன்று போட்ட முடுச்சு நிகழ்கிறதோ இன்று…

கெட்டிமேளம் முழங்க மாங்கல்ய மன்றத்தில் இணையும் இந்த ப்ரியமான நெஞ்சங்களை பேரன்போடு வாழ்த்துகிறோம் …

இளமை மாறி முதுமை அடைந்தாலும் கூட இந்த மாறாத அன்பும் ஒற்றுமையும் கொண்டு ஒன்றாக கலந்திருங்கள். வாழ்க்கையை இனிமையான தருணங்களாக மாற்றி அமைத்திடுங்கள்…

மனம் நிறைந்த திருமண நாள் வாழ்த்துக்கள்…

தித்திக்கும் அழகிய தருணம், ஊரே வந்து வாழ்த்தும் மகத்தான நாள், இரு கரங்கள் இணைய ஒருமனதாக சம்மதிக்கும் உன்னத நாள், காத்திருந்த நாட்கள் எல்லாம் காலாவதி ஆகி இன்று கரம் பிடித்த கையோடு இந்த ஊரையே வலம் வந்து வளம் பெற நடக்கும் சிறந்த தினமே திருமண தினம்…
இரு இல்லங்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு பெற்று அண்டை அயலார்களின் நல்வரவுடன் தாம்பத்திய வாழ்க்கையை தேடி செல்லும் இந்த இரு புதிய பூக்களுக்கு என் மனமிகு திருமண வாழ்த்துக்கள்
சிவனும் பார்வதியும் போல இருவரும் எப்பொழுதுமே நீக்கமற நிறைந்து ஒரே உணர்வுடன் இருவரில் ஒருவராக கலந்து சிறப்பாக வாழ கோடான கோடி வாழ்த்துக்கள்.
அக்கினியை சாட்சியாய் வைத்து வாழ்வில் திருமணம் என்னும் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கும் இந்த இதயங்களுக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
கணவன் மனைவி உறவு என்பது யாருக்கு யார் துணை என்று தேவன் கணக்கிட்டு அன்று போட்ட ஒரு முடிச்சு இன்று நிறைவு பெறுகிறது…
காலங்கள் கரைந்தாலும் மாற்றங்கள் பல கண்டாலும் நீங்காமல் புரிதலில் ஒன்றிணைந்து, விட்டு கொடுப்பதில் வள்ளலாகி, தவறுகளை சரி செய்து கொண்டும் அன்பினை இருவரும் பகிர்ந்து கொண்டும் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.