வேப்பம் பூவின் அற்புதமான மருத்துவ குணங்கள்..!

Summarize this blog post with:

வேப்ப மரத்தின் காற்றே பல வியாதிகளைக் குணப்படுத்துகிறது. வேப்பமரம் உள்ள வீட்டில் எந்த நோயும் வராது என்றே சொல்லாம். அதனால் வீட்டில் ஒரு வேப்பமரம் வளர்ப்பது நல்லது. வேம்பின் குச்சி, இலை, துளிர், பூ, கொட்டை, வேப்ப எண்ணை, வேப்பம்பட்டை என அனைத்தும் சிறந்த மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.

வேப்பம்பூ சித்திரை மாதத்தில் தான் பூக்கும். இந்த பூக்கள் காற்றில் ஒருவித நறுமணத்தை பரப்பிக் கிருமி நாசினியாக செயல்படுகிறது. வேப்பம்பூ வெயில் காலத்தில் மட்டுமே பூக்கும் என்பதால் அதை சுத்தப்படுத்தி காய வைத்துக் கொண்டால், நாம் அதனை வருடம் முழுக்க பயன் படுத்திக் கொள்ளலாம். மாதக்கணக்கில் வைத்திருந்தாலும் அதன் மருத்துவ குணங்கள் மாறாது. வேப்பம்பூவில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது. அது என்னவென்று பார்ப்போம்.

  • கொதிக்க வைத்த நீரில் வேப்பம் பூவை போட்டு ஆவி பிடித்தால் தலைவலி, காது வலி நீங்கும் மற்றும் கபம், பித்தம் சம்பந்தப்பட்ட வியாதிகளையும் வேப்பம்பூ கட்டுப்படுத்துகிறது.
  • வெயிலினால் ஏற்படும் நாவறட்சி, அரிப்பு, தோல் வியாதி, வயிற்றுப்பிரட்டல் போன்ற பிரச்சினைகளுக்கு வேப்பம்பூ சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
  • வேப்பம் பூவை மென்று தின்றால் வாயுத்தொல்லை, அதிகமாக ஏப்பம் வருதல், பசியின்மை போன்றவைகளுக்கு நல்ல பலன் கிடைக்கும்.
  • சாக்பீஸ், மண், விபூதி போன்றவற்றை சாப்பிடும் பழக்கம் உள்ள குழந்தைகளுக்கு வேப்பம்பூ கஷாயம் கொடுத்தால் வயிறு சுத்தமாகும்.
  • வேப்பம் பூவை ஊற வைத்து அந்த நீரை பருகுவதால் அல்லது அந்த நீரால் வாயை கொப்பளிப்பதால் நாக்கில் ஏற்படும் பூஞ்சை தொற்று சரி ஆகிவிடும். மேலும் இது அல்சருக்கும் அருமருந்து.
  • வேப்பம்பூவை தொடர்ந்து சிறிதளவு உட்கொள்வதன் மூலம் ரத்த அழுத்தம், கொழுப்பு மற்றும் நீரிழிவு நோயாளிகளை கட்டுக்குள் வைத்திருக்கலாம்.
  • உடலில் உள்ள தேவையற்ற காற்றை வேப்பம்பூ வெளியேற்றுகிறது. அதனால் தானாகவே ரத்த அழுத்தம் குறையும். அதேபோல் கல்லீரலில் தேவையற்ற கொழுப்பு சேராமல் இருக்க இது உதவும்.
  • வெயிலில் காயவைத்துப் பொடி செய்த வேப்பம் பூவை, பருப்புப் பொடியுடன் சாதத்தில் கலந்து சாப்பிட்டால் வாந்தி, ஏப்பம் போன்ற பிரச்சனைகள் வராது.
  • உஷ்ண உடம்பு கொண்டவர்கள் வேப்பம் பூவை அளவுடன் எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால், இது உடல் சூட்டை அதிகரித்துவிடும். அதேபோல் வயிற்றுப்போக்கு, மூல நோய் மற்றும் அதிக உடல் உஷ்ணம் உள்ளவர்கள் மாதத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை எடுத்துக் கொண்டால் போதும்.
  • வேப்பம் பூவை துவையலாகவோ, ரசமாகவோ அல்லது குழம்பாகவோ செய்து சாப்பிடலாம். இப்படி செய்து சாப்பிட்டால் கசப்புத் தன்மை குறைவாக இருக்கும்.
gpkumar: இவர் பிரவீன் குமார் கணேசன் (Praveen Kumar Ganesan) என்பவராவார். இவர் Inavit Studio மற்றும் Bestpriceinindia.com ஆகிய இணையதளங்களின் நிறுவனரும், தொழில்நுட்ப ஆய்வாளருமாவார். இவர் தனது GPKUMAR என்ற பெயரால் அறியப்படுகிறார். இவர் தொழில்நுட்ப பகுப்பாய்வு மற்றும் டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ளார். நிஜ உலக செயல்திறன் அடிப்படையில் ஸ்மார்ட்போன்கள், இயர்பட்கள் போன்ற கேஜெட்களை மதிப்பீடு செய்வதில் இவர் கவனம் செலுத்துகிறார்

This website uses cookies.