நம் அனைவரின் மனதிலும் ஏதேனும் ஒரு முறையாவது காதல் பட்டாம்பூச்சி பறந்திருக்கும். சிலருக்கு யாரையாவது பார்க்கும் போதெல்லாம் அவர்களின் மனதில் ஒருவித புத்துணர்ச்சியும், இதயம் வேகமாக துடிப்பது என விசித்திரமாக நமக்கு தோன்றும். அப்படி நம் மனதைக் கொள்ளை அடிக்கக்கூடியவர்கள் யார், குறிப்பாக எந்த ராசியை சேர்ந்தவர்களாக இருப்பார்கள் என்பதைப் பார்ப்போம்.

மனதை ஈர்க்கும் ராசி:-

 • ஜோதிடத்தில் 12 ராசிகளும், அதில் 3 நட்சத்திரங்கள் என அமைந்துள்ளன. ஒவ்வொரு ராசிக்கும், நட்சத்திரத்திற்கும் நவகிரகங்களில் ஒருவர் அதிபதியாக இருப்பார். பொதுவாக ஒரு கிரகத்திற்கும், மற்றொன்றிற்கும் இடையே நட்பு, பகை அல்லது சமம் என்ற நிலை இருக்கும். எந்த இரண்டு கிரகங்களிடையே நட்பு அதிகமாக இருக்கிறதோ, அந்த இருவருக்கும் இடையே ஒருவித ஈர்ப்பு இயற்கையாகவே இருக்கும்.
 • அந்த வகையில் எந்த ராசியினரைப் பார்த்தால், எந்த ராசியினருக்கு அது போன்ற உணர்ச்சி, இதயத்துடிப்பை அதிகமாக்கும் என்பதைப் பார்ப்போம்.

மேஷம்:-

 • செவ்வாய் அதிபதியாக கொண்ட இந்த ராசிக்காரர்களின் மனம், மனதை ஆளக்கூடிய, மனோகாரகனான சந்திரன் ஆளும் கடக ராசியினர் மீது அதிக நாட்டம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
 • இருவரிடையே எப்போதும் ஒருவித ஈர்ப்பு இருக்கும். அதிலும் குறிப்பாக மேஷ ராசியினர், கடக ராசியினரைக் கண்டாலே அவர்களின் மனதில் பட்டாம் பூச்சி பறப்பது போல உணர்வார்கள்.

ரிஷபம்:-

 • ரிஷப ராசியினர் காதல் விஷயங்களில் இயல்பிலேயே சற்று தீவிரமானவர்களாக இருப்பார்கள். இவர்களின் நாட்டம் எல்லாம் சிம்ம ராசியினரிடம் அதிகமாக இருக்கும். ஏனெனில் சிம்ம ராசியினரின் ஆளுமையும், யாரையும் சாராமல் வாழும் பழக்கம் ரிஷபத்தை அதிகம் ஈர்க்கக்கூடியதாக இருக்கும்.

மிதுனம்:-

 • மிதுன ராசியினரை, மீன ராசியினர் வெகு விரைவாக ஈர்க்கக்கூடியவர்களாக இருப்பார்கள். மீன ராசியினர் பேசும் விதம், அவர்களின் செய்கை மிதுன ராசியினரை வெகுவாக கவரக்கூடியதாக இருக்கும். மிதுன ராசியினர் பொதுவாக மிகவும் பேசக்கூடிய இயல்புடையவர்கள்.

கடகம்:-

 • கடக ராசியினர் சற்று உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள். மன சஞ்சலம் கொண்ட இவர்கள் எதையும் எளிதாக செய்ய நினைக்க மாட்டார்கள். மன நெகிழ்வான இவர்கள் கும்ப ராசியினரைக் கண்டாலே வெகு விரைவாக ஈர்க்கப்படுவார்கள். கும்பம் ராசிக்காரர்களின் கவனத்துடன் பணிபுரியும் பழக்கம் அவர்களை மிகவும் கவர்கிறது.

​சிம்மம்:-

 • சிம்ம ராசியினர் மனதை ஒருமுகப்படுத்தத் தெரிந்தவர்கள். ஆளுமை அதிகமாக இருக்கும் இவர்களை, புத்திசாலித்தனமாகச் செயல்படக்கூடிய கன்னி ராசியினரைப் பார்த்தால் ஒருவித ஈர்ப்பு ஏற்படும். கன்னி ராசியினர் பொதுவாக மற்ற ராசியினரை விட அதிக புத்திசாலித்தனமாகக் கருதப்படுகிறார்கள்.
See also  Tamil letter format

கன்னி ராசி:-

 • கன்னி ராசிக்கு துலாம் ராசியினரைப் பார்த்தால் ஒருவித ஈர்ப்புடன், பரவசமடைவார்கள். துலாம் ராசியினர் எந்த ஒரு விஷயத்தையும் மென்மையாக செய்யும் பழக்கம் கொண்டவர்கள். அவர்களைப் பார்த்தாலே கன்னி ராசிக்கு குதுகலமாக உணர்வார்கள்.

​துலாம் ராசி:-

 • துலாம் ராசியினருக்கு, மகர ராசியினரைப் பார்த்தால் அதிக ஈர்ப்பும், மனதில் குதூகலமாகவும் உணர்வார்கள். மகர ராசியினர் எந்த ஒரு வேலையையும் முழுமையாக பரிபூரணத்துடன் செய்வார்கள். எதற்காகவும் சலித்துக் கொள்ளாமல் இருக்கும் இவர்களின் குணம் துலாமிற்குப் பிடிக்கும்.

​விருச்சிக ராசி:-

 • விருச்சிக ராசியினரின் அதிகம் விரும்பக்கூடிய ராசியினராக மிதுன ராசியினர் இருப்பார்கள். மிதுன ராசியினரின் ஸ்டைல், புத்திசாலித்தனம் மிகவும் பிடிக்கும். இவர்கள் இணைந்தால் அவர்களின் உறவு நீண்ட காலம் நீடிக்கும்.

​தனுசு ராசி:-

 • தனுசு ராசியினருக்கு விருச்சிக ராசியினர் என்றாலே ஒரு வித ஈர்ப்புடன் இருப்பார்கள். விருச்சிக ராசியினரின் துரிதமான, புத்திசாலித்தனமாகவும், தங்கள் வேலையை முழு அர்ப்பணிப்புடன் செய்யும் விதமும், அவர்களின் நேர்மையும் தனுசு ராசியினரை ரசிக்க வைக்கும். இந்த பழக்கம் தனுசு ராசிக்காரர்களுக்கு மிகவும் பிடிக்கும்.

​மகர ராசி:-

 • மகர ராசியினருக்கு தனுசு ராசியினர் மீது அதிக நாட்டத்துடன் இருப்பார்கள். தனுசு ராசியினரின் நகைச்சுவை குணம், எதையும் சிரித்துக் கொண்டே கடந்து செல்வதும், டேக் இட் ஈஸி என்ற குணம் மகரத்திற்கு மிகவும் பிடிக்கும். தனுசு ராசிக்காரர்கள் எப்பொழுதும் சிரித்து சிரித்துப் பேசும் பழக்கம் விரும்பத்தக்கத்தாக இருக்கும்.

கும்பம்:-

 • கும்ப ராசியினருக்கு, ரிஷப ராசியினர் மீது ஈர்ப்புடன் இருப்பார்கள். ரிஷப ராசியினரின் மற்றவர்களுக்கு உதவும் குணமும், அக்கறை கொள்ளும் குணம் மிகவும் பிடித்ததாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் ரிஷபத்தின் சுதந்திர சிந்தனை கும்ப ராசியை அதிகம் ஈர்ப்பதாக இருக்கும்.

​மீனம் ராசி:-

 • மேஷ ராசிக்காரர்களைப் பார்த்தால் மீன ராசிக்கு அதிக ஈடுபாடும், ஈர்ப்பும் இருக்கும். அதனால் வெகு விரைவில் ஈர்க்கப்படுவார்கள். உண்மையில் மீன ராசினர், மேஷ ராசிக்காரர்களின் கவர்ச்சியான, ஆளுமையை மிகவும் விரும்புகிறார்கள். அதனால்தான் இந்த இருவரின் ஜோடியும் நன்றாக இருக்கிறது.