2022 Kawasaki Ninja 650 bike ரூ.6.61 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முந்தைய பைக் மாடலுடன் ஒப்பிடும்போது, இந்த சமீபத்திய 2022 நிஞ்ஜா 650 பைக் மாடல் ரூ.7,000 விலை உயர்த்தப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாடல் வருடாந்திர புதுப்பிப்பாக, இப்போது புதிய வண்ணங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Kawasaki bike side view

இந்த பைக்கின் புதிய புதுப்பிப்பின் அடையாளமாக, லைம் கிரீன் பெயிண்ட் வொர்க்கை 2022 கவாசாகி நிஞ்ஜா 650 பைக் பெற்றுள்ளது, மேலும் கீழ்பக்க அலங்கார வடிவமைப்புகளில் வெள்ளை நிறத்தையும் மற்றும் ரெட் பின்ஸ்ட்ரைப் கிராபிக்ஸையும் கொண்டுள்ளது. அது மட்டுமல்லாமல், மெட்டாலிக் கிரே மற்றும் லைம் கிரீன் ஹைலைட்ஸ் உடன் பியர்ல் ரோபோடிக் வெள்ளை வண்ண வடிவமைப்பையும் கொண்டுள்ளது.

இந்த புதுப்பிப்புகளைத் தவிர, மோட்டார் சைக்கிள் பாகங்கள் எந்தவித மாற்றங்களும் இல்லாமல் அப்படியே இருக்கும். சர்வதேச சந்தையில் இந்த பைக்கின் KRT பதிப்பும் உள்ளதாம். இந்த பதிப்பு லைம் கிரீன்/எபோனி/பியர்ல் பிலிஸ்ஸார்டு ஒயிட் வண்ணப்பூச்சு திட்டத்தில் வழங்கப்படுதாம்.

மோட்டார் சைக்கிள் அதன் முழு LED head lamp (எல்இடி ஹெட்லேம்ப்) மற்றும் வால் விளக்கு அமைப்பு ஆகியவற்றை அப்படியே தக்கவைத்தக் கொண்டு இருக்கிறது. இதன் 4.3 inch முழு நிற TFT டிஸ்ப்ளே ப்ளூடூத் இணைப்போடு இணக்கமானது.

மோட்டார் சைக்கிளின் இதயமாக 649 cc , இணையான இரட்டை, திரவ-குளிரூட்டப்பட்ட இன்ஜின் உள்ளது, இதுபோலவே Z650 ஸ்ட்ரீட்ஃபைட்டர் மோட்டார் சைக்கிளிலும் உள்ளது. இந்த இன்ஜின் ஆறு வேக கியர்பாக்ஸு(Gearbox)டன் ஒரு ஸ்லிப்பர் கிளட்ச் செயல்பாட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த மோட்டார் சைக்கிளில் சஸ்பென்ஷன் கடமைகள் முன்பக்கத்தில் டெலெஸ்கோபிக் ஃபோர்க்ஸ் மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் அபிசார்பர் மூலம் கையாளப்படுகிறது. பிரேக்கிங் கடமைகளை ஹாண்டல் பண்ண இந்த பைக் முன்புறத்தில் இரட்டை டிஸ்க் பிரேக்குகளையும் பின்புறத்தில் ஒரு டிஸ்க் பிரேக் உடன் டூயல் சேனல் ABS ஆதரவையும் கொண்டுள்ளது.

See also  AIADMK இன் கடைசி நிமிட ஒதுக்கீட்டு ஒப்பந்த முத்திரைகள் கூட்டணி