தமிழகத்தில் ரயில் நிலையங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு பிளாட்பார்ம் டிக்கெட் விலையை தெற்கு ரயில்வே அதிரடியாக உயர்த்தி இருக்கிறது.

ரயில் நிலையங்களில் உள்ளே செல்வதற்கு பிளாட்பார்ம் டிக்கெட் எனப்படும் அனுமதிச் சீட்டு கட்டாயமாக வைத்திருக்கனும். ரயில்வே வாரியம் கடந்த 2015ஆம் ஆண்டில் ரூ.5ஆக இருந்த பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணத்தை ரூ.10ஆக உயர்த்தியது.

கூட்ட நெரிசல் உள்ளிட்ட ஏதேனும் குறிப்பிட்ட தேவை இருக்கும் போது பிளாட்பார்ம் டிக்கெட்டின் விலையை ரூ.10க்கும் அதிகமாக நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று அந்தந்த ரயில்வே பிரிவுகளுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 30ஆம் தேதி வரை ரயில் நிலையத்தில் பிளாட்பார்ம் டிக்கெட்டின் விலையை ரூ.10லிருந்து ரூ.15ஆக தெற்கு ரயில்வே உயர்த்தியது. இது இடைக்கால உத்தரவாக இருந்தது.

அப்போது கோடை கால கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்று தெற்கு ரயில்வே விளக்கம் அளித்தது.

தற்போது தமிழகத்தில் ரயில்வே பிளாட்பார்ம் டிக்கெட் விலை ரூ.10லிருந்து ரூ.50ஆக உயர்த்தி தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, சென்னையில் சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ஆகிய ரயில் நிலையங்களில் பிளாட்பார்ம் டிக்கெட் விலை ரூ.50ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.

ரயில் நிலையங்களில் கூட்ட நெரிச்சலை குறைக்கும் வகையில் இந்த விலையேற்ற நடவடிக்கை தற்காலிகமாக எடுக்கப்பட்டுள்ளது என்று தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.

இந்த திடீர் விலையேற்றம் பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

See also  மீண்டும் தெடர்கிறது விவசாயிகள் போராட்டம்......