ஆடி 18 வாழ்த்துக்கள்

காவிரித்தாய் மடியினிலே
கவலையெல்லாம் மறப்போம்
களிப்புடனே பாடி ஆடி
காதல் கூடச் செய்வோம்.
———————————-
சேற்று வயல் தனைப்பார்த்து
சூரியனோ மகிழ.
நாற்றுகளின் விளைச்சலிலே
நாமெல்லாம் மகிழ.
ஆற்று வெள்ள நீரினிலே-நாம்
ஆடி வந்து மகிழ.
வேற்றுமையைக் களைந்தெறிந்து
ஒற்றுமையில் மகிழ.

முழு நிலவின் ஒளியினிலே
முழு மனதாய் அமர்வோம்
முப்பொழுதும் உணவோடு
பழங்கதைபேசி மகிழ்வோம்.
———————————-
இந்த ஆடிப் பெருக்குத் திருநாளில்
நீங்கள் எண்ணிய எண்ணமெல்லாம்
நிறைவேறிடவும் உங்கள் வாழ்வில்
குறைவில்லா செல்வமும்,குன்றா வளமும்
நோய் நொடியற்ற உடலும் பெற்று
வாழ்ந்திட மனமாற வாழ்த்துகிறேன்.

happy aadi perukku 2022,

aadi 18 wishes in tamil

aadi perukku wishes in tamil,

happy addi 18 images in tamil