ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை!

Summarize this blog post with:

கடலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் (Aavin) காலியாக உள்ள மேலாளர், துணை மேலாளர் மற்றும் கூடுதல் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 8 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.1.75 லட்சம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : கடலூர் மாவட்ட தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் (Aavin)

மேலாண்மை : தமிழக அரசு

பணி : மேலாளர், துணை மேலாளர் மற்றும் கூடுதல்

மொத்த காலிப் பணியிடங்கள் : 08

பணியிடம் : கடலூர் மாவட்டம்

கல்வித் தகுதி : பி.வி.எஸ்.சி, ஐ.டி.ஐ, எம்.எஸ்.சி மற்றும் எதாவது ஒரு துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதியம் : ரூ.15,700 முதல் ரூ.1,75,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பப் படிவம் பெற : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.aavinmilk.com என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு 11.02.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : The General Manager, Cuddalore District Cooperative Milk Producers Union Limited, Sethiathope, Cuddalore-608702.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 11.02.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் வாய்வழி சோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் – ரூ.250
  • எஸ்சி / எஸ்சிஏ / எஸ்டி வேட்பாளர்களுக்கு – ரூ.100

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://aavinmilk.com/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

gpkumar: இவர் பிரவீன் குமார் கணேசன் (Praveen Kumar Ganesan) என்பவராவார். இவர் Inavit Studio மற்றும் Bestpriceinindia.com ஆகிய இணையதளங்களின் நிறுவனரும், தொழில்நுட்ப ஆய்வாளருமாவார். இவர் தனது GPKUMAR என்ற பெயரால் அறியப்படுகிறார். இவர் தொழில்நுட்ப பகுப்பாய்வு மற்றும் டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ளார். நிஜ உலக செயல்திறன் அடிப்படையில் ஸ்மார்ட்போன்கள், இயர்பட்கள் போன்ற கேஜெட்களை மதிப்பீடு செய்வதில் இவர் கவனம் செலுத்துகிறார்

This website uses cookies.