ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில், பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், 11ஆம் வகுப்பு மற்றும் கல்லூரியில் எந்த மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடத்தப்படுவது என்ற குழப்பம் நீடித்து வந்தது.

இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் செயல்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி, தமிழகத்தில் உள்ள 51 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளில் நடப்பு ஆண்டிற்கான சேர்க்கை 9-ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் நடத்தப்படும் என தெரிவித்தார்.

மேலும் பொறியியல் மற்றும் கலை, அறிவியல் கல்லூரிகளின் சேர்க்கைக்கான விதிமுறைகளை குழு அமைத்து ஆய்வு செய்து வருகிறோம் எனவும் தெரிவித்தார்.

 

See also  சக்ரா மூவி - தமிழ் sneak பீக்