கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், பிளஸ் 2 பொதுத் தேர்வு நடத்துவது குறித்து தமிழக அரசு ஆலோசனை நடத்தி வந்தது.

சி.பி.எஸ்.இ பொதுத் தேர்வுகளை பிரதமர் மோடி ரத்து செய்து உத்தரவிட்டிருந்த நிலையில், தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதை குறித்து பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோரிடம் கருத்து கேட்கப்பட்டது. மேலும் தமிழகத்தில் பொதுத் தேர்வுகள் நடத்தப்படுவது குறித்து பொதுமக்கள் ஆன்லைன் மூலம் கருத்து தெரிவிக்க ஏற்பாடும் செய்யப்பட்டு இருந்தது.

மேலும் இது தொடர்ப்பாக சட்டப்பேரவையில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் பிரநிதிகள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மருத்துவ நிபுணர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தினார்.

அனைத்து தரப்பினரிடம் கருத்துக்கள் கேட்கப்பட்ட பிறகு, இது குறித்த அறிக்கையை ஒன்றை தயார் செய்த அமைச்சர் அன்பில் மகேஷ் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து அறிக்கையை சமர்ப்பித்தார்.

இதைத்தொடர்ந்து பிளஸ் 2 பொதுத்தேர்வுகளை ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மாணவர்களுக்கு எந்த அடிப்படையில் மதிப்பெண் வழங்குவது என்பதனை குறித்து முடிவு செய்ய, பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்ய உள்ளது. இக்குழு அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

See also  இரத்தம் உறைதல் நம் உடலில் எங்கெங்கு ஏற்படும்..? அதற்கான அறிகுறிகள் என்னென்ன..?